Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இந்தியாவின் `பிர்லா' காங்கேசன்துறை செல்ல அனுமதி
[02 - May - 2008] [Font Size - A - A - A]
யாழ்ப்பாணத்தில் செயற்படாத நிலையிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் முகமாக இந்திய முதலீட்டுக் குழுவொன்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு சீமெந்து உற்பத்தியில் சிறந்த போட்டித்தன்மையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் விரும்புவதாக தெரிவித்துள்ள சேனாரத்ன, உள்ளூரில் நிலவும் கடுமையான சீமெந்து பற்றாக்குறையை நிவர்த்தி

செய்வதற்காக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்திகளை மீள ஆரம்பிக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல முதலீட்டு நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமத்துடன் பேச்சுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வருட முற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுகளைத் தொடர்ந்து காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு பிர்லா குழுமம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் சேனாரத்ன மேலும் தெரிவிக்கையில்;

தற்போது நிலவும் சீமெந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்குமான இரு முக்கிய நோக்கங்களின் அடிப்படையிலேயே இத்தொழிற் சாலையில் பணிகளை மீள ஆரம்பிப்பதில் நான் மிகுந்த ஆர்வம் காட்டுகிறேன்.

இத்தொழிற்சாலைப் பகுதியை பிர்லா குழுமத்தின் அதிகாரிகள் பரிசோதிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கைத்தொழில் அமைச்சிலுள்ள லங்கா சீமெந்திலிருந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பிர்லா குழுமத்தினர் எமது அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை தொழிற்சாலை மீண்டும் இயங்குமானால் பிர்லா குழுமத்தினர் சீமெந்தை குறைந்த விலையில் விற்பார்கள். அத்துடன், இத்தொழிற்சாலை மீதான பிர்லாவின் முதலீடு தற்போது 40 வீதத்திலிருக்கும் சீமெந்து உற்பத்தியை 80 வீதம் வரையில் அதிகரிப்பதற்கு உதவும்.

வடபகுதியில் நிலவும் போர்ச் சூழலின் காரணமாக உள்நாட்டு சீமெந்து சந்தையில் செல்வாக்கு செலுத்தும் ஹொல்சுமி மற்றும் டோக்கியோ போன்ற சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் காங்கேசன்துறை தொழிற்சாலையில் முதலிடுவதற்கு தயங்குகின்றன.

எனவே, சீமெந்து உற்பத்தி துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலையை தவிர்த்து சிறந்த போட்டித்தன்மையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் விரும்புகிறதெனத் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
உளவியல் ரீதியான வெற்றி எதிர்பார்ப்புடன் கிழக்கில் தேர்தலை நடத்தும் அரசாங்கம்
பயங்கரவாத நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம், புலிகள்
வவுனியா, மணலாறு தாக்குதலில் 4 படையினர் பலி, மூவர் படுகாயம்
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம்
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 2 விசேட அதிரடிப் படையினர் பலி
தேர்தல் அவதானிப்பாளராக பணியாற்ற சர்வதேச அமைப்புகள் பல மறுப்பு
இந்தியாவின் `பிர்லா' காங்கேசன்துறை செல்ல அனுமதி
வடக்கு, கிழக்கை வைத்து தெற்கில் அரசியல் நடத்தும் சக்திகளால் நாடு மோசமான நிலையில்
கிழக்கு மீண்டும் பிரபாகரனிடம் சிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்
இதயம், கர்ப்பப்பை அகற்றப்பட்டு இலங்கைக்கு குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணின் சடலம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதி சைனைட் அருந்தி உயிரிழந்ததாக அறிவிப்பு
இ.தொ.கா. குடையின் கீழ் மலையக மக்கள் அணி திரண்டால் சகல தேவைகளையும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன்
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி பேச்சு மூலம் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தல்
இரு தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடியில் கடும் மோதல்
சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம்
கிழக்கு தேர்தலோடு மு.கா.வை ஓரங்கட்ட நினைத்தோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு பெரும் சவால்
தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை கிழக்கில் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல
கிழக்குத் தேர்தலில் 9 உறுப்பினர்களை ஐ.ம.சுதந்திர முன்னணி பெறும்
எதிரணியோடு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை ஒரு போதும் வென்றெடுக்க முடியாது
முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புக்கான ஓர் திட்டமே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலாகும்
சீருடை தரியாதோரிடம் ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கவும்
ஈழக் கோரிக்கை, நிதி மோசடி நாட்டில் இரு பயங்கரவாதங்கள்
நாட்டில் அடுத்த இரண்டரை மாதத்தில் மோசமான காலநிலையே நிலவும்
விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
சர்வதேசத்தின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசிய நிலைமை
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரத்தை உலகில் எங்கும் காணமுடியாது
நீதியான நிரந்தர சமாதானத்துக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி
தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் உரைகள் இன ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது
முஸ்லிம் முதலமைச்சர் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே ஐ.தே.க. வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்தது
`இன்றைய இனவாத அரசை தோற்கடிப்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்துவோம்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com