வவுனியா துட்டுவெவ பகுதியில் நேற்று வியாழக் கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேநேரம், தாங்கள் நடத்திய பதில் தாக்குதலில் இரு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலை 6.45 மணியளவில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மீதே துட்டுவெவ பகுதியில் இந்தக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது இரு அதிரடிப்படையினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இதேநேரம், அதிரடிப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இந்தத் தாக்குதலை நடத்திய இரு புலிகள் கொல்லப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளது.