Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
விலைமாதர்களென நினைத்து அரவாணிகளிடம் சிக்கித் தவித்த பிரேசில் வீரர் ரொனால்டோ
[02 - May - 2008] [Font Size - A - A - A]
விலைமாதர்கள் என நினைத்து அரவாணிகளிடம் சிக்கித் தவித்தார் புகழ் பெற்ற பிரேசில் காற்பந்து வீரர் ரொனால்டோ.

பிரேசில் அணியின் நட்சத்திரக் கால்பந்து வீரர் ரொனால்டோ திங்கட் கிழமை அதிகாலையில் நேரத்தில் மூன்று `செக்ஸ் தொழிலாளர்களுடன் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அவர்கள் மூவரும் பெண்கள் அல்ல அரவாணிகள் என்பதை தாமதமாகத் தெரிந்து கொண்ட ரொனால்டோ தலா 25,000 ரூபா கொடுத்து அவர்களிடம் இருந்து தப்ப முயற்சி செய்துள்ளார். இதனை இருவர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஒருவர் மட்டும் ரொனால் டோ தங்களுடன் பேசிக் கொண்டிருந்ததை `வீடியோ' எடுத்து 12 இலட்சம் ரூபா கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர், ரொனால்டோ தங்களுக்கு பணம் தர மறுக்கின்றார் என வீதியில் கூச்சல் போட்டுள்ளார். அவரது காரை உடைத்து பொருட்களை திருட முயன்றதாகவும் தெரிகின்றது.

இதையடுத்து பொலிஸ் தலையிட்டது. இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ படம் இன்ரநெற்றில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்;

"ரொனால்டோ எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவர் மீது செக்ஸ் தொழிலாளர் ஒருவர் பணம் கொடுக்கவில்லை என புகார் செய்துள்ளார். ரொனால்டோ மற்றும் இரண்டு செக்ஸ்தொழிலாளர்களையும் தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்போம். ரொனால்டோவை மிரட்டிய செக்ஸ் தொழிலாளி மீது வழக்குத் தொடர்ந்துள்ளோம்".

இவ்விவகாரத்துக்கு பின்னரும் ரொனால்டோவின் மதிப்பு பிரேசிலில் குறையவில்லை என்கிறார் அவரது ரசிகை ஒருவர். இது குறித்து அவர் கூறுகையில்;

"ரொனால்டோவின் புகழுக்கு களங்கம் விளைவிக்க யாரோ செய்த சதி இது. அவர் ஏன் இது போன்ற செக்ஸ் தொழிலாளர்களுடன் வெளியில் செல்ல வேண்டும்" என்றார்.

Email this page Your Opinion Print this page
காம்பிர் , மெக்ராத்தின் சிறப்பான ஆட்டத்தால் டில்லி அணி பத்து ஓட்டங்களால் வெற்றி
ஐ.பி.எல். போட்டிகளில் அழகிகள் ஆடத் தடை
களத்தில் மீண்டும் மோசமாக நடந்தால் வாழ்நாள் தடையென ஹர்பஜனுக்கு எச்சரிக்கை
அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். போட்டியிலிருந்து நாடுதிரும்பினர்
அக்தரின் ஐந்தாண்டு தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக் குழு நிராகரித்தது
விலைமாதர்களென நினைத்து அரவாணிகளிடம் சிக்கித் தவித்த பிரேசில் வீரர் ரொனால்டோ
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com