Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
களத்தில் மீண்டும் மோசமாக நடந்தால் வாழ்நாள் தடையென ஹர்பஜனுக்கு எச்சரிக்கை
[02 - May - 2008] [Font Size - A - A - A]
களத்தில் ஹர்பஜன் மீண்டும் மோசமாக நடந்து கொண்டால் வாழ்நாள் தடை விதிக்கப்படுமென ஐ.பி.எல்.நிர்வாகக் குழு உறுப்பினர் ஐ.எஸ்.பிந்த்ரா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மொகாலியில் நடந்த ஐ.பி.எல்.லீக் போட்டியில் ஷ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் அறைந்தார். இது விசாரணையில் உறுதி செய்யப்பட, 11 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டார். இந்நிலையில், ஐ.பி.எல்.நிர்வாகக் குழு உறுப்பினர் ஐ.எஸ். பிந்த்ரா கூறுகையில்;

`ஹர்பஜன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையைப் பார்த்துத் திருந்திக்கொள்ள வேண்டும். அவுஸ்திரேலிய தொடரின் போதே எச்சரிக்கப்பட்டார். நான் அவருக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கூறினேன். ஆனால், அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. அவரது செய்கைகள் எங்களுக்கு வருத்தத்தையளிக்கிறது.

இப்போது விதிக்கப்பட்ட தடையுடன் முடிந்து விடவில்லை. இந்தியன் கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மீண்டும் ஒரு முறை ஹர்பஜன் இது போன்ற செயலில் ஈடுபட்டால் வாழ்நாள் தடையைச் சந்திக்கநேரிடும். பொதுவாகவே வீரர்கள் உட்பட அனைவரும் இந்தியன் கிரிக்கெட் சபை கருணை உள்ளம் கொண்டது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஹர்பஜன் விடயத்தில் இது பொய்யாகிவிட்டது.

அவுஸ்திரேலியாவில் நடந்த சம்பவத்துடன் இதனை ஒப்பிடக்கூடாது. அந்த விடயத்தில் ஹர்பஜன் குற்றமற்றவர். ஆதலால், இந்திய கிரிக்கெட் சபை முழுமையாக ஆதரவு தெரிவித்தது . தற்போதைய பிரச்சினையில் குற்றம் செய்துள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Email this page Your Opinion Print this page
காம்பிர் , மெக்ராத்தின் சிறப்பான ஆட்டத்தால் டில்லி அணி பத்து ஓட்டங்களால் வெற்றி
ஐ.பி.எல். போட்டிகளில் அழகிகள் ஆடத் தடை
களத்தில் மீண்டும் மோசமாக நடந்தால் வாழ்நாள் தடையென ஹர்பஜனுக்கு எச்சரிக்கை
அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். போட்டியிலிருந்து நாடுதிரும்பினர்
அக்தரின் ஐந்தாண்டு தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக் குழு நிராகரித்தது
விலைமாதர்களென நினைத்து அரவாணிகளிடம் சிக்கித் தவித்த பிரேசில் வீரர் ரொனால்டோ
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com