Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
காம்பிர் , மெக்ராத்தின் சிறப்பான ஆட்டத்தால் டில்லி அணி பத்து ஓட்டங்களால் வெற்றி
[02 - May - 2008] [Font Size - A - A - A]
காம்பிர் , மெக்ராத்தின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க டில்லி டேர்டெவில்ஸ் அணி டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) ருவென்ரி 20 தொடர் நேற்று முன்தினம் டில்லியில் நடந்த பரபரப்பான லீக் போட்டியில் சேவாக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியைச் சந்தித்தது. நாணய சுழற்சியில் வென்ற டிராவிட் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

சேவாக், காம்பிர் இணைந்து டில்லிக்கு அசத்தல் தொடக்கம் கொடுத்தனர். சகிர்கான் வீசிய இரண்டாவது ஓவரில் காம்பிர் `ஹட்ரிக் ' பவுண்டரி விளாசி அதிரடியை ஆரம்பித்து வைத்தார். சகிர் வீசிய அடுத்த ஓவரில் சேவாக் தன் பங்குக்கு ஒரு சிக்சர் , 2 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 18 ஓட்டங்கள் எடுக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்தது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 53 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரோஸ் டெய்லரின் துல்லிய `த்ரோவில்' சேவாக் ரன் அவுட்டானார். ஒரு சிக்சர் , 3 பவுண்டரி உட்பட 12 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து ஷிகார் தவான் வந்தார். இவர் கலிஸ் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். அருமையாக விளையாடிய காம்பிர் அதிவிரைவாக அரைச்சதம் அடித்தார். சுனில் ஜோஷி வீசிய 14 ஆவது ஓவரில் அதிரடி காட்டிய இந்த ஜோடி 2 சிக்ஸர் , ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 19 ஓட்டங்கள் எடுத்தது. கலிஸ் ஓவரில் மீண்டும் சிக்ஸர் அடித்து 49 ஓட்டங்கள் எட்டிய தவான் அடுத்த பந்தில் அரைச்சதம் அடித்தார். 3 சிக்சர், 4 பவுண்டரி விளாசிய இவர் 33 பந்தில் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சொயிப் மாலிக் (6) இம்முறை சோபிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் (2) ஏமாற்றமளித்தார். சகிர் வேகத்தில் காம்பிர் 86 ஓட்டங்கள் (11 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்தார். டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களை எடுத்தது.

கடின இலக்கை சேஸ் செய்த பெங்களுர் அணி மெக்ராத் வேகத்தில் திணறியது. இவரது முதல் ஓவரில் பிரவீண் (6) வெளியேறினார். இதற்குப் பின் ரோஸ் டெய்லர் கலக்கினார். ஆசிப், மெக்ராத் ஓவர்களில் சிக்ஸர்கள், பவுண்டரிகள் விளாசினார். 5 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஸ் டெய்லரை (29) வெளியேற்றிய மெக்ராத் 6 ஆவது பந்தில் ஜாபரையும் (10) ஆட்டமிழக்கச் செய்தார்.

கப்டன் டிராவிட்டும் (38) , மெக்ராத் பந்தில் வீழ்ந்தார். இப்படி முன்வரிசை தகர்ந்த நிலையில் கலிஸ் மட்டும் தனிநபராகப் போராடினார். இவர் 54 ஓட்டங்களுக்கு வெட்டோரி சுழலில் சிக்கினார். கடைசி ஓவரில் 30 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. கப்டன் சேவாக் சாதுர்யமாக பந்து வீசினார்.

துணிச்சலாக ஆடிய பவுச்சர் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்த போதும் வெற்றியைத் தேடித் தரமுடியவில்லை. இறுதியில் பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை எடுத்துத் தோல்வியடைந்தது. பவுச்சர் (31) ஆட்டமிழக்காமலிருந்தார். 4 ஓவரில் 29 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய மெக்ராத் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Email this page Your Opinion Print this page
காம்பிர் , மெக்ராத்தின் சிறப்பான ஆட்டத்தால் டில்லி அணி பத்து ஓட்டங்களால் வெற்றி
ஐ.பி.எல். போட்டிகளில் அழகிகள் ஆடத் தடை
களத்தில் மீண்டும் மோசமாக நடந்தால் வாழ்நாள் தடையென ஹர்பஜனுக்கு எச்சரிக்கை
அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். போட்டியிலிருந்து நாடுதிரும்பினர்
அக்தரின் ஐந்தாண்டு தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக் குழு நிராகரித்தது
விலைமாதர்களென நினைத்து அரவாணிகளிடம் சிக்கித் தவித்த பிரேசில் வீரர் ரொனால்டோ
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com