ஜெக்குலின் பார்க்
தெற்காசியா முழுவதுமுள்ள நாடுகளில் ஊடகவியலாளர்களும் ஊடக ஊழியர்களும் எந்த விதத்திலாவது அடிக்கடி சிறையிலடைக்கப்படுகின்றனர். சில சம்பவங்களில் ஊடகவியலாளர்கள் எதுவித காரணமுமின்றி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதுடன் ஏனைய சம்பவங்களில் போலி குற்றச்சாட்டுகளை முன் வைத்து சிறையிலிடப்படுகின்றனர். அப்படியில்லாவிட்டால் மக்களுக்கு தேவையான தகவல்களைச் சேகரித்தல், ஆராய்தல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற உரிமைகளை செயற்படுத்தும் காரணத்தால் தண்டனையாக சிறையிலடைக்கப்படுகின்றனர். மற்ற சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களும் மற்றும் ஊடக நிறுவனங்கள் உத்தியோகபூர்வ தடைக்கு தலைவணங்கி அல்லது சுய தணிக்கை மூலம் பாதுகாப்பு தேடிச் செல்வதால் தம்மைத்தாமே விலங்கிட்டுக் கொள்கின்றனர்.
2007- 2008 தெற்காசிய வருடாந்த ஊடக சுதந்திர அறிக்கையில் அந்தந்த நாடுகளின் தேசிய ஊடகவியலாளர்களின் அமைப்புகளால் சேகரித்த தகவல்களில் தெற்காசியாவில் சில நாடுகளில் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் தாக்குதலுக்குள்ளான மற்றும் அச்சுறுத்தல்களுக்குள்ளான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் பெரும்பாலானோர் இளம் பருவத்தினர் மற்றும் இத்தொழிலுக்குப் புதியவர்களாவர்.
உதாரணத்துக்கு ஆப்கானிஸ்தானில் 23 வயதான ஊடகவியலாளரும் மாணவருமான சயிட் பர்வேஸ் கம்பாக்ஷ் இறைவனை அவமதித்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியாகக் காணப்பட்டு ஜனவரி மாதம் ரகசியமான வழக்கு விசாரனையின் பின்னர் மரண தண்டணை விதிக்கப்பட்டதுதான்.
அவர் செய்த குற்றம் என்ன? அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்து இஸ்லாமிய கலாசார அடிப்படையில் பெண்களின் உரிமைகள் தொடர்பான தகவல்களை இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொண்டு மசார். ஈ. சரீப்பிலுள்ள பல்க் பல்கலைக்கழக மாணவர்களின் சிறு குழுவினருக்கு வழங்கியது தொடர்பாகவே அவர் சர்வதேச செய்திவலையமைப்புக்குள் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான கட்டுரைகள் எழுதுவது காரணமாக அபகீர்த்திக்குள்ளான ஊடகவியலாளரொருவரின் இளைய சகோதரராவார்.
இலங்கையில் முத்துசாமி பரமேஸ்வரி (24) பல வருடங்களாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் சமீபத்தில் நாட்டை விட்டு வெளியேறி மறைந்து வாழ்கின்றார். அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட அச்சுறுத்தலுக்குள்கியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2007 ஆம் ஆண்டு மார்ச் வரை பரமேஸ்வரி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் எதுவித குற்றச்சாட்டுகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் பல சந்தர்ப்பங்களில் சீருடை தரித்த நபர்கள் சிலரால் அவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டும் இருக்கின்றார். செய்தி எழுதுவதை நிறுத்தும் படி கோரியே இதனை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். அவர் செய்த குற்றம் என்ன? பரமேஸ்வரி அவரது கட்டுரைக்காக கடத்தப்படுதல் மற்றும் ஏனைய மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக அரசின் பங்கு குறித்து தகவல்களைத் திரட்டி அவற்றை பகிரங்கப்படுத்தினார். இலங்கை அரசு அவர் பெண் பயங்கரவாதி என்ற முத்திரை குத்தியது. அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆயுதக் குழுவினரின் இனத்தைச் சேர்ந்தவரென்பதாலேயே.
பரமேஸ்வரி உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததிலிருந்து மீள உதவி கோரியிருந்தார். அச்சமற்ற வாழ்க்கை வாழ்வதற்கும் மற்றும் தமது கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளவும் நாட்டிலிருந்து வெளியேறவே தாம் விரும்புகின்றார் என அவர் சொன்னார். அவர் மேலும் கூறுகையில்;
"நீண்ட காலமாக தடுத்து வைத்திருந்ததும் தொடர்ந்து இன்னல்களுக்கு உட்படுத்தியதாலும் வாழ்க்கை தொடர்பாக ஏற்பட்ட அச்சம் காணமாக அவரது உள நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ள கௌன்சிலிங் பெறும் தேவையுள்ளது" என்றார்.
இந்த உதாரணம் மூழ்கியுள்ள பனி மலையின் உச்சி மாத்திரமே தெற்காசியா முழுவதும் அதற்கப்பால் உலகம் முழுவதும் இளைய ஊடகவியலாளர்கள் ஊடக சுதந்திரத்திற்கும் நாளாந்த வாழ்க்கையில் சகலருக்கும் அத்தியாவசியமான தகவல்களை தெரிந்து கொள்ள எதிராகவுள்ள சக்திகள் இன்னல்களுக்குட்பட்டுள்ளது. எந்த வயதினரான ஊடகவியலாளர் மற்றும் ஊடக ஊழியர்கள் மக்களுக்கு தகவல் வழங்கும் காரணத்தால் தடைக்குள்ளாவதும் தாக்குதலுக்கு இலக்காவதும் அல்லது சிறையிலிடப்படுவதும் மிக மோசமான செயலாகும்.
எவ்வறாயினும் கம்பாக்ஷ், பரமேஸ்வரி மற்றும் அகாஷ் போன்ற இளம் ஊடகவியலாளர்களின் புலனாய்வு மற்றும் அவர்களது குரலை அடக்குவது எடுக்கப்படும் முயற்சிகள் ஊடகவியலாளர்கள் அவர்களது தொழிலை செய்வதை அதைரியப்படுத்த முயற்சிப்பது மோசமான செயலாகும். இதன் காரணமாக தமக்கு தனிப்பட்ட முறையிலும் தமது குடும்பத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் உண்மையான செய்திகளை வெளியிடுவதன் பெறுமதிக்கு மேலானது என இளைய தலைமுறையினர் எண்ணக்கூடும்.
இப்போது பாகிஸ்தானில் இலங்கை மற்றும் பங்களாதேஷில் ஊடக ஊழியர்கள் தங்களது தொழிலை கைவிட்டுச் சென்றுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது. தொழிலில் தமக்குள்ள பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்துவது, தடையினால் கலவரமடைந்திருப்பது, சுய தணிக்கைக்கான அழுத்தங்களுடன் ஒத்துப்போக முடியாதிருப்பது, மோசமான தொழில் நிலை மற்றும் குறைந்த வேதனம் தொடர்பான விடயங்கள் இதற்குக் காரணமாகும்.
இளைய ஊடகவியலாளர்களுக்கு ஊடகத் தொழிலில் ஈடுபட வர்த்தக ரீதியான ஊக்குவிப்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாக அவர்கள் தங்கள் தொழிலில் மக்கள் சேவைப் பெறுமதியை ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார சமமின்மை , உச்ச மட்டத்திலுள்ள நாடுகளில் ஊடகவியலாளர்கள் பணம் மற்றும் சலுகைகளுக்கு அடிபணிவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஊடக சுதந்திரமென்பது நிலையான மற்றும் பாதுகாப்பான சமூகத்துக்கு கட்டாய செயற்பாடுகளாகும். அதை வெற்றிகொள்வது எப்போதும் சாத்தியமற்றது. அதை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகள் மட்டுமன்றி ஊடக உரிமையாளர்கள், அரசியல் பலமிக்கவர்கள், சமூகத் தலைவர்கள் , பொதுமக்களதும் ஒன்றுபட்ட முயற்சியில் செய்யவேண்டியுள்ளது.
உலகம் முழுவதுமுள்ள ஊடகவியலாளர்களின் அமைப்புகள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக ஆர்வமுள்ளோருக்காக நாம் இன்று சனிக்கிழமை உலக ஊடக சுதந்திர தினத்தைக் கொண்டாட நாம் தயாராகியிருக்கின்றோம். எமது மக்கள் சமூகத்துக்கு ஊடக சுதந்திரம் தேவைப்படுவது ஏன் என்பதை நாம் உணர்த்துவோம். இதற்கிடையில் முறையற்ற ரீதியில் சிறையிலடைக்கப்படுவது, அச்சுறுத்தல்கள் தேவையில்லை என்பதை புதிய ஊடக செயற்பாட்டாளர்களுக்கு உறுதிப்படுத்துவதற்காக குரல் கொடுப்போம்.
(கட்டுரையாளர் சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வலய அலுவலகப் பொறுப்பாளர்)