எனக்கு அறிமுகமான ஒருவர் என்னைச் சந்தித்தபோது புதிய தகவலொன்றைத் தந்தார்.
ஒரே வாரத்தில் இவருக்கு மூன்று திருமண அழைப்பிதழ்கள் கிடைத்தனவாம். அழைப்பிதழ் வாசிக்குமுன் `எங்கே திருமண வைபவம்?" என்று கேட்டபோதெல்லாம் "தமிழ்நாட்டில்தான்" என்று பதில் வந்ததாம்.
திருமண அழைப்பிதழ்களை இங்கு அச்சிட்டு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வேண்டியவர்களுக்கு வழங்கினாலும் திருமண வைபவம் தமிழ்நாட்டில் நிகழ்வதற்கே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாம்.
இப்படி, அக்கரையில் நிகழ்வை நடத்தினால் அநேகர் வந்து கலந்துகொள்ள முடியாதே என்று அன்பர் சொன்னபோது, "அது எங்களுக்கு நன்கு புரிகிறது. ஆனால், நிம்மதியாக, சிக்கனமாக, தொல்லை எதுவும் இல்லாமல் திருமணத்தை நடத்த அங்குதானே செல்ல வேண்டியிருக்கிறது" என்று அழைப்பிதழை தந்த ஒருவர் குறிப்பிட்டாராம்.
திருமண வைபவங்களுக்கு ஒழுங்குகளைச் செய்து கொடுப்பவர்களைப் பொறுத்தவரை, இங்கு கோடை அங்கு காட்டில் மழைதான்!.