* எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் கிழக்கு முஸ்லிம்களின் எதிர்கால தலைவிதியை சுபிட்சமாக மாற்றக் கூடிய வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். ஆகவே முஸ்லிம்கள் மிக நிதானமாக சிந்தித்து முஸ்லிம்களை ஏமாற்றும் றவூப் ஹக்கீமின் வலைக்குள் வீழ்ந்து யானைக்கு வாக்களிக்காமல் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென ஐ.ம.சு. கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஹிஸ்புல்லாஹ் தமதுரையில் இந்த தேர்தல் மூலம் முஸ்லிம்களின் பாதக, சாதகங்களை தீர்மானிக்கமுடியும். முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதன்மூலமே எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையிலான உறவை வளர்த்து அவர்களுக்கும் சமமான பங்கீடுகளை வழங்கி கிழக்கு மாகாணத்தை சுபிட்சமான பாதையில் இட்டுச்செல்ல முடியும். மாறாக றவூப்ஹக்கீமின் பசப்பு வார்த்தைகளை நம்பினால் நாம் ஏமாந்து இருண்டயுகத்துக்கே செல்லவேண்டிய நிலை ஏற்படுமென்றும் தெரிவித்தார்.