கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் சார்பில் (ஈரோஸ்) போட்டியிடும் முத்துக்குமார் ராஜேஸ்வரி (42 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே மரணமடைந்தவராவார்.
சுகயீனம் காரணமாக இவர் பொத்துவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டபோது மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் பொத்துவில் பன்சாலை வீதியைச் சேர்ந்தவர்.