Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பொதுச் சொத்துக்களை விழுங்கும் அரசியல் முதலைகளை சாடுகிறார் சபாநாயகர்
[03 - May - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம்.நிலாம்

பொதுச் சொத்துக்களையும், வளங்களையும் விழுங்கும் அரசியல் முதலைகளை கடுமையாக சாடியிருக்கும் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார அரசியல்வாதிகள் தவறுகளை திருத்திக் கொள்ளத் தவறினால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாமென எச்சரித்துள்ளார்.

பிரேமதாஸ போன்ற நேர்மையான அரசியல் தலைவர்களின் தேவை நாட்டுக்கு அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 15 ஆவது சிரார்த்த தின வைபவத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

பிரேமதாஸ எமது நாட்டுக்குக் கிடைத்த உன்னதமான புருஷராவார். உழைப்பாளர்களை நேசித்தவர். உழைக்கும் வர்க்கத்தின் சேவையை நாட்டுக்கு உணர்த்திய யதார்த்தவாதி. காலத்தைப் பொன்னாக மதித்தவர். ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பாதவர். ஒரு தடவை ஊர்காவற்றுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ.இரத்தினம் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவைச் சந்தித்த நேரம் கேட்டபோது காலை 4மணிக்கு வருமாறு தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த நேரத்தில் சந்தேகம் கொண்ட இரத்தினம் எம்.பி.மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின்னேரம் 4 மணியா அதிகாலை 4 மணியா என்று கேட்டபோது அதிகாலை 4 மணிதான் என்று ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். அந்தளவுக்கு நேரத்தையும், காலத்தையும் பொன்போன்று பாதுகாத்தவர் பிரேமதாஸ. காலத்தை வீணடிப்பவர்களை அவருக்கு அறவே பிடிக்காது. நேரத்துக்குத் தன்னை அடிமைப்படுத்தாமல் அதனைத் தனக்கு அடிமைப்படுத்திக் கொண்டவர். அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபட்டவர்.

பிரேமதாஸவின் இழப்பை ஈடுசெய்யக்கூடிய ஒருவர் இன்றுவரை எமக்குக் கிடைக்கவில்லை. கிராமத்தை வளப்படுத்துவதன் மூலம் நாட்டை உயர்வடையச் செய்ய முடியுமென்ற நம்பிக்கையுடன் செயற்பட்டவர்.

இன்று எமது நாட்டின் பொதுச் சொத்துக்களையும் வளங்களையும் சில அரசியல் முதலைகள் விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். என்றோ ஒருநாள் அவர்கள் இதற்கு பிராயச்சித்தம் தேடியே ஆக நேரிடலாம். இன்றைய அரசியல் தலைவர்களிடம் நிறைய குறைபாடுகள் காணப்படுகின்றன. கடந்த காலத்தவறுகளை உணர்ந்து நாட்டுக்காக இனியாவது சிந்திக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்காக நேர்மையுடன் நாம் செயற்படத் தவறினால், எமது அடுத்த சந்ததி எமது புதைகுழிகளில் சாபமிடும் நிலைமை ஏற்படலாமெனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா இயக்கம்; கருணாநிதி நடிப்பு
குடாநாட்டின் உட்புறங்களில் படையினர் தீவிர தேடுதல்
கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் இலக்கத்தகடற்ற வாகனங்கள்
சமாதானமே இலங்கையரின் எதிர்பார்ப்பு விடுதலைப்புலிகளுடனும் பேச்சுக்கு தயார்
5 இராணுவத்தினர், 20 க்கும் மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் பலி; படைத்தரப்பு தெரிவிப்பு
கஞ்சிகுடிச்சாறில் மிதிவெடியில் சிக்கி 2 இராணுவத்தினர் பலி; 2 பேர் காயம்
தமிழக கடலோரம் 2 இழுவை கப்பல்கள் கரையொதுங்கியதால் பெரும் பதற்றம்
`பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் காலத்தை நழுவவிட்டிருக்கும் அரசு'
குளவிகள் கொட்டி 20 மாணவர் படுகாயம்
நீதிமன்றத்தில் அறைகள் ஒதுக்கப்படாததை கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் வெள்ளி முதல் பகிஷ்கரிப்பு
வெள்ளவத்தை வீதி விபத்தில் பெண் பலி காரினால் மோதுண்டவரை பஸ் நசித்தது
கைதடி யுவதி வெள்ளை வானில் வந்தோரால் கொழும்பில் கடத்தல்
ஆட்டோ சாரதியை காணவில்லை
பிரான்ஸில் நடைபெற்ற மேதின நிகழ்வில் 7000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்பு
மக்கள் விரும்புவது சமாதானத்தையே; யுத்தத்தை அல்ல ஐ.தே.க.வுக்கு வாக்களித்து செய்தியை வெளிப்படுத்துங்கள்
ஊடகவியலாளர்கள் குழு மட்டக்களப்பு, அம்பாறை விஜயம்
காலியில் சுற்றிவளைப்பு 54 பேர் கைது
நளினியின் விடுதலை கோரும் மனுவுக்கும் பிரியங்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
அதி உயர் விருதுகள் வழங்கப்பட்டு முப்படைத்தளபதிகள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு த.ம.வி.பு.வினரால் தொடர்ந்தும் மரண அச்சுறுத்தல்
பயங்கரவாத அமைப்புகள் இணையத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய முடிவு
புலிகள் மீது பழிபோட கருணா குழு சதியென கூறும் இந்திய அரசு உளவுத்துறையின் நிலைப்பாடு என்ன?
யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி 185 ஆவது ஆண்டு நிறைவு விழா
தென்னிலங்கையில் 2,123 சிவில் பாதுகாப்பு குழுக்கள்
தேர்தல் பிரசாரத்தை த.ம.வி.பு. ஆயுதத்துடன் நடத்தவில்லை
கிழக்கு தேர்தல் களத்தில் அமைச்சர்கள்
இலக்கத் தகடற்ற வாகனங்களை ஆளும் தரப்பினர் பயன்படுத்துவது குறித்து அரசுக்கு எதுவும் தெரியாது
ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இருநாள் பாடசாலையில் கடமையாற்றும் தீர்மானம் வாபஸ்
தமிழ் மக்களின் உரிமைகளை அகிம்சை ரீதியாக பெற வேண்டுமென செயற்பட்டவர் தந்தை செல்வா
வவுனியா, மன்னார் விலை மதிப்பீட்டு திணைக்கள வேலைகள் அநுராதபுர அலுவலகத்துடன் இணைப்பு
மலையக அரசியல், தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்ட தீர்மானங்கள்
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெரியண்ணன் தோரணையில் இந்தியா தலையிட ஒருபோதும் இடமளிக்ககூடாது
பொதுச் சொத்துக்களை விழுங்கும் அரசியல் முதலைகளை சாடுகிறார் சபாநாயகர்
சொந்த மண்ணில் மக்களுக்கு பிழையான தகவலை வழங்குவது போர் தந்திரமாகவோ பயங்கரவாத ஒழிப்பாகவோ அமையாது
வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பித்தால் ஜே.வி.பி.க்கு எந்தவொரு சிக்கலும் இல்லை
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்
கூட்டுறவாளர்கள் பொருட்களை நியாய விலையில் வழங்கி மக்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட உதவ வேண்டும்
வானில் கடத்தப்பட்ட ஜெலிக்நைற் குச்சிகள் பாலாவியில் கடற்படையால் கண்டுபிடிப்பு
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மரணம்
ரவூப் ஹக்கீமின் வலைக்குள் வீழ்ந்து விடாது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்
பிள்ளையான் குழுவுடனான ஒப்பந்தத்திற்கும் அம்பாறை மாவட்ட கப்பல் சின்ன குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாகாண சபைத் தேர்தல் வரப்பிரசாதமாகும்
பொலிஸ் அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பதாக தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பு
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஜயலத் மட்டக்களப்புக்கு விஜயம்
தமிழ்-முஸ்லிம் உறவில் பகை உணர்வை வளர்க்கும் அரசின் திட்டமே கிழக்கு மாகாண சபை தேர்தல்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com