ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் பாடசாலையில் கடமையாற்ற வேண்டுமென்ற தீர்மானத்தை கல்வியமைச்சு வாபஸ் பெற்றுள்ளது.
ஆசிரிய ஆலோசகர்கள் தமது கடமை நேரத்தில் தனிப்பட்ட விடயங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தநிலையில் கல்வியமைச்சானது ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இரு நாட்கள் பாடசாலையில் கடமையாற்ற வேண்டுமென்ற கட்டாய தீர்மானத்தை கொண்டுவந்தது.
இத்தீர்மானத்திற்கு ஆசிரிய ஆலோசகர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் இத்தீர்மானத்தை வாபஸ் பெறாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோமெனவும் எச்சரித்திருந்தனர்.
இதனையடுத்தே கல்வியமைச்சு தனது தீர்மானத்திலிருந்து வாபஸ் பெற்றதாக அறியவருகிறது.
கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கடமையாற்ற வேண்டுமென்ற தீர்மானத்தை கைவிட்டுள்ளதாகத் தெரிவித்து மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அவசர சுற்றறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார்.