ஆளும் கட்சி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பலர் திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் இவர்களின் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி, அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன , மகிந்த விஜேசேகரா ஆகியோர் தற்போது திருமலை நகரில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.