* உறுதியாக கூறுகிறார்
ஊடக அமைச்சர்கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார களத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் செயற்படவில்லையென அமைச்சர் அநுரபிரியதர்ஷனயாப்பா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும், கருத்து தெரிவிக்கையில்;
"கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை அவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் பொய்யானவையாகும்" இதனை முழுமையாக மறுக்கிறேன்.
வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் 2 உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆயுதங்களுடன் நடமாடியிருப்பார்களாயின் இப்படுகொலைகள் நடைபெற்றிருக்காது. இப்படுகொலைகள் மூலம் அவர்கள் ஆயுதங்களுடன் பிரசாரத்தில் ஈடுபடவில்லையென்பது தெளிவாகிற"தென்றார். இங்கு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்;
"கானா நாட்டில் 125 நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக நானும் கலந்து கொண்டேன். இதன் போது இலங்கையின் பொருளாதாரம் குறித்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இது இலங்கையர்களுக்குக் கிடைத்த பெருமையாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது" என்றார்.