தென்னிலங்கையில் இரண்டாயிரத்து 123 சிவில் பாதுகாப்பு கமிட்டிகள் நிறுவப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு இணைப்புப் பணிப்பாளரும் பொலிஸ் பிரதி அத்தியட்சருமான தமயந்த விஜய சிறி தெரிவித்தார்.
காலி பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் உள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் 508 சிவில் பாதுகாப்பு கமிட்டிகளும் எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சர் பிரிவிலுள்ள 11 பொலிஸ் நிலையங்களின் கீழ் 381 சிவில் பாதுகாப்பு கமிட்டிகளும் மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் 649 சிவில் பாதுகாப்பு கமிட்டியும் 14 பொலிஸ் அத்தியட்சர் பிரிவுகளின் கீழ் 585 சிவில் கமிட்டிகளும் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சிவில் கமிட்டிகளில் மொத்தம் 49,916 பேர்கள் அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.
வாகனங்கள், பாதைகள், தனிநபர்கள் ஆகியவற்றை பரிசோதனை செய்யும் வேலைகளை இப்போது இவர்கள் மேற்கொள்கின்றனர்.