* ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் இணையத் தளங்களை தங்களுக்குச் சார்பாக பயன்படுத்துவதைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி மற்றும் உள்நாட்டமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாடு ஒன்றிலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீவிரவாத அமைப்புகள் பணம் சேகரிப்பு நடவடிக்கைகள், பிரசாரங்கள் போன்றவற்றை இணையத்தளங்கள் ஊடாகவே மேற்கொள்கின்றன.
இவ்வாறான நடவடிக்கைகளால் இணையத்தளமானது தீவிரவாத அமைப்புகளுக்கு முக்கியமானதொரு கருவியாக வந்துகொண்டிருப்பதுடன் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கும் பயிற்சி வழங்குவதற்கும் குண்டு தயாரிப்புகளுக்கும் அதனைப் பயன்படுத்துவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.