* காங்கிரஸ் கட்சி தெரிவிப்பு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான நளினி விடுதலைகோரி தாக்கல் செய்த மனுவுக்கும் அவரை பிரியங்கா காந்தி சந்தித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லையென காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அவரை வேலூர் சிறைக்கு வந்து பிரியங்கா சந்தித்து விட்டுச் சென்ற பின்னர் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரியங்கா சந்திப்புக்கும் நளினியின் மனுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், "பிரியங்காவின் சந்திப்புக்கும் நளினியின் மனுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரியங்கா, நளினியை சந்தித்ததால் எந்தவித சட்டச் சிக்கலும் இல்லை" என்று கூறினார்.