மாத்தறை மற்றும் கல்முனை ஊடக இல்லங்களின் ஏற்பாட்டில் தென்பிராந்திய ஊடகவியலாளர்கள் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு தினங்கள் தங்கி இருக்கும் இவர்கள் மயிலம்பாவெளி, பெரியபுல்லுமலை போன்ற இடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வதுடன், மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள் பற்றியும் ஆராயவுள்ளனர்.
மூன்று நாட்கள் அம்பாறை மாவட்டத்தில் தங்கி இருக்கும் இவர்கள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் உட்பட பக்மிட்டியா, வடினாகல போன்ற பிரதேசங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளவுள்ளதாக கல்முனை ஊடக இல்லப் பணிப்பாளர் எம்.ஐ. எம். சதாத் தெரிவித்தார்.