கடந்த மாதம் 19 ஆம் திகதி சனிக்கிழமை முதல் காணாமற்போன தவநாயகம் காந்தரூபன் (30 வயது) என்ற ஆட்டோ சாரதி இன்னமும் விடுவிக்கப்படவில்லை என அவரது சகோதரிமார் தெரிவித்துள்ளனர்.
வேலணையைச் சேர்ந்த இவர் அவரது தாயாரின் மறைவுக்குப் பின்னர் இங்கு வந்து வவுனியா வேப்பங்குளம் பகுதியில் சகோதரிமாருடன் கடந்த 12 வருடங்களாக வாழ்ந்து வருகிறார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
றேடியோ கடைக்குப்போவதாக கூறிச்சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வவுனியா பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறையிட்டுள்ளனர்.
வவுனியாவில் காணாமல் போவோர் தொகை அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.