குண்டசாலைத் தொகுதியில் அமைந்துள்ள இராஜவெல தமிழ் தேசியப் பாடசாலை மாணவர்களை குளவிகள் கூட்டம் தாக்கியதால் சுமார் 20 பேர் படுகாயமடைந்த நிலையில் மெனிக்கின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் நேற்று வெள்ளிக்கிழமை இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
வழமைபோல் நேற்று முற்பகல் பாடசாலையில் இடைவேளை விடப்பட்டிருந்தபோது மாணவர்கள் வெளியில் நடமாடிக் கொண்டிருந்துள்ளனர்.
இவ்வேளையில் அங்கு திடீரென திரண்டு வந்த குளவிகள் மாணவர்களைக் கொட்டித் தாக்கியுள்ளன.
இவற்றின் இத்தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் மாணவர்கள் பாடசாலைக் கட்டிடங்களிலும் வெளியார் கட்டிடங்களிலும் ஓடி மறைந்துள்ளனர்.
எனினும், சில ஆசிரியர்கள் உட்பட சுமார் 20 மாணவர்கள் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி மெனிக்கின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.