Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சமாதானமே இலங்கையரின் எதிர்பார்ப்பு விடுதலைப்புலிகளுடனும் பேச்சுக்கு தயார்
[03 - May - 2008] [Font Size - A - A - A]
* மகாத்மாவின் பேத்தி எலா காந்தி கூறுகிறார்

எம்.ஏ.எம். நிலாம், யோ.நிமல்ராஜ்

இலங்கை மக்கள் அனைவருமே விரைவில் அமைதியும் சமாதானமும் கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சமாதானத்துக்கான மதத் தலைவர்களின் உலக மகாநாடு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்த அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தென்னாபிரிக்க எம்.பி.யுமான எலாகாந்தி (மகாத்மா காந்தியின் பேத்தி) அரசாங்கம் எதிர்க் கட்சிகளுடன் மட்டுமன்றி விடுதலைப் புலிகளுடனும் நாம் பேசத் தயாராகவிருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

எம்மால் எந்தளவுக்கு சமாதான முயற்சிகளை முன்கொண்டு செல்ல முடியுமோ அந்தளவு தூரத்துக்கு தீவிரப்படுத்துவோம். இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவருமே தொடரும் போரினால் களைப்புற்றிருக்கின்றனர். அவர்கள் சமாதானத்துக்காக ஏங்குகின்றனர் எனவும் எலாகாந்தி தெரிவித்தார்.

சமாதானத்துக்கான மதத் தலைவர்களின் உலக மாநாட்டின் இலங்கைக் கிளையை அமைத்து கண்டியிலும் திருகோணமலையிலும் கருத்தரங்குகளை நடத்திய பின்னர் இலங்கைக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு டிரான்ஸ் ஏசியா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே எலா காந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

"சமாதானத் தீர்வை உடனடியாக எட்டமுடியாதிருப்பினும் இலங்கை மக்கள் தமக்கு விரைவாக சமாதானம் வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். பிரச்சினையுடன் தொடர்புபட்டவர்களுக்கிடையில் இணக்கம் காணப்படுவதில் காலம் கடந்துகொண்டே போகின்றது. இன்று பேசி நாளை தீர்வு என்று எம்மால் உறுதியளிக்க முடியாது. ஆனால், எல்லாத்தரப்புகளையும் இணைக்கப்படுவதில் நாம் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியுள்ளது.

எமது அமைப்பு சமய வழியில் அமைதி தேட முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சிகளை முன் கொண்டு வருகின்றது.

அரசாங்கத்துடன் பேச வருகின்றோம். அத்துடன், பிரதான எதிர் கட்சி உட்பட மேலும் பல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவிருக்கின்றோம். இவர்களுக்கப்பால் விடுதலைப் புலிகளுடனும் பேசியாக வேண்டும். நிச்சயமாக அவர்களுடனும் பேசுவதற்குத் தயாராகவே இருக்கின்றோம். இலங்கையின் இனப் பிரச்சினைக்கு வன்முறைகளற்ற தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அந்த நம்பிக்கையுடனேயே இந்த முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளோம்" எனவும் எலா காந்தி தெரிவித்தார்.

சர்வதேச மதத்தலைவர்கள் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவரான கியோச்சி சுகினோ கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

"இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் பொருட்டு நான்கு மதங்களினதும் மதத் தலைவர்களை உள்ளடக்கியதான அமைப்பை மாவட்ட, மாகாண மட்டத்தில் உருவாக்கி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதேசமயம் சமாதானத் தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளிலும் அமைப்பு முழு அளவிலான பங்களிப்பைச் செய்யும். இலங்கையில் இந்த அமைப்பை ஸ்தாபிக்கக் கிடைத்தமையானது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகவே நாம் கருதுகின்றோம்."

இலங்கை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கிங்ஸிலி ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

"அரசியல் தலைவர்கள் தத்தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் படி தமது நிலைப் பாடுகளை நியாயப்படுத்த முனைகின்றனர். ஆனால், மதத்தலைவர்கள் அப்படி எண்ணவில்லை மனிதாபிமான நோக்கோடு நாட்டையும் மக்களையும் பற்றியே அவர்கள் சிந்திக்கின்றனர். அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதிலேயே நாம் கூடுதல் அக்கறை காட்டிவருகின்றோம்.

ஜனாதிபதியுடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் ஆரம்பத்தில் பேசி அடுத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடனும் பேசுவோம். இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் பேசுவோம். நாம் ஆரம்பப்படியில் கால் பதித்துள்ளோம். தாமதங்கள், தடைகள் வந்தாலும் கூட முயற்சிகளை தொடர்வோம்" எனக் குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா இயக்கம்; கருணாநிதி நடிப்பு
குடாநாட்டின் உட்புறங்களில் படையினர் தீவிர தேடுதல்
கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் இலக்கத்தகடற்ற வாகனங்கள்
சமாதானமே இலங்கையரின் எதிர்பார்ப்பு விடுதலைப்புலிகளுடனும் பேச்சுக்கு தயார்
5 இராணுவத்தினர், 20 க்கும் மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் பலி; படைத்தரப்பு தெரிவிப்பு
கஞ்சிகுடிச்சாறில் மிதிவெடியில் சிக்கி 2 இராணுவத்தினர் பலி; 2 பேர் காயம்
தமிழக கடலோரம் 2 இழுவை கப்பல்கள் கரையொதுங்கியதால் பெரும் பதற்றம்
`பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் காலத்தை நழுவவிட்டிருக்கும் அரசு'
குளவிகள் கொட்டி 20 மாணவர் படுகாயம்
நீதிமன்றத்தில் அறைகள் ஒதுக்கப்படாததை கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் வெள்ளி முதல் பகிஷ்கரிப்பு
வெள்ளவத்தை வீதி விபத்தில் பெண் பலி காரினால் மோதுண்டவரை பஸ் நசித்தது
கைதடி யுவதி வெள்ளை வானில் வந்தோரால் கொழும்பில் கடத்தல்
ஆட்டோ சாரதியை காணவில்லை
பிரான்ஸில் நடைபெற்ற மேதின நிகழ்வில் 7000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்பு
மக்கள் விரும்புவது சமாதானத்தையே; யுத்தத்தை அல்ல ஐ.தே.க.வுக்கு வாக்களித்து செய்தியை வெளிப்படுத்துங்கள்
ஊடகவியலாளர்கள் குழு மட்டக்களப்பு, அம்பாறை விஜயம்
காலியில் சுற்றிவளைப்பு 54 பேர் கைது
நளினியின் விடுதலை கோரும் மனுவுக்கும் பிரியங்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
அதி உயர் விருதுகள் வழங்கப்பட்டு முப்படைத்தளபதிகள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு த.ம.வி.பு.வினரால் தொடர்ந்தும் மரண அச்சுறுத்தல்
பயங்கரவாத அமைப்புகள் இணையத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய முடிவு
புலிகள் மீது பழிபோட கருணா குழு சதியென கூறும் இந்திய அரசு உளவுத்துறையின் நிலைப்பாடு என்ன?
யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி 185 ஆவது ஆண்டு நிறைவு விழா
தென்னிலங்கையில் 2,123 சிவில் பாதுகாப்பு குழுக்கள்
தேர்தல் பிரசாரத்தை த.ம.வி.பு. ஆயுதத்துடன் நடத்தவில்லை
கிழக்கு தேர்தல் களத்தில் அமைச்சர்கள்
இலக்கத் தகடற்ற வாகனங்களை ஆளும் தரப்பினர் பயன்படுத்துவது குறித்து அரசுக்கு எதுவும் தெரியாது
ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இருநாள் பாடசாலையில் கடமையாற்றும் தீர்மானம் வாபஸ்
தமிழ் மக்களின் உரிமைகளை அகிம்சை ரீதியாக பெற வேண்டுமென செயற்பட்டவர் தந்தை செல்வா
வவுனியா, மன்னார் விலை மதிப்பீட்டு திணைக்கள வேலைகள் அநுராதபுர அலுவலகத்துடன் இணைப்பு
மலையக அரசியல், தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்ட தீர்மானங்கள்
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெரியண்ணன் தோரணையில் இந்தியா தலையிட ஒருபோதும் இடமளிக்ககூடாது
பொதுச் சொத்துக்களை விழுங்கும் அரசியல் முதலைகளை சாடுகிறார் சபாநாயகர்
சொந்த மண்ணில் மக்களுக்கு பிழையான தகவலை வழங்குவது போர் தந்திரமாகவோ பயங்கரவாத ஒழிப்பாகவோ அமையாது
வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பித்தால் ஜே.வி.பி.க்கு எந்தவொரு சிக்கலும் இல்லை
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்
கூட்டுறவாளர்கள் பொருட்களை நியாய விலையில் வழங்கி மக்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட உதவ வேண்டும்
வானில் கடத்தப்பட்ட ஜெலிக்நைற் குச்சிகள் பாலாவியில் கடற்படையால் கண்டுபிடிப்பு
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மரணம்
ரவூப் ஹக்கீமின் வலைக்குள் வீழ்ந்து விடாது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்
பிள்ளையான் குழுவுடனான ஒப்பந்தத்திற்கும் அம்பாறை மாவட்ட கப்பல் சின்ன குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாகாண சபைத் தேர்தல் வரப்பிரசாதமாகும்
பொலிஸ் அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பதாக தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பு
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஜயலத் மட்டக்களப்புக்கு விஜயம்
தமிழ்-முஸ்லிம் உறவில் பகை உணர்வை வளர்க்கும் அரசின் திட்டமே கிழக்கு மாகாண சபை தேர்தல்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com