பதுளை சேனாநாயக்க திடலில் இடம்பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டத்தில் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பிரதி சுகாதார அமைச்சருமான வடிவேல் சுரேஷ் கௌரவிக்கப்படுவதனையும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் காணலாம்.
யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து யாழ்.நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி பி.சுவர்ணராஜாவையும் (மத்தி) மாவட்ட நீதிபதி ஆர்.ரி.விக்கினராஜாவையும் (வலது) மாவட்ட மேலதிக நீதிபதி ஆர்.வசந்தசேனனையும், சட்டத்தரணிகளுக்கான ஆலோசனைக் கூடத்தையும் நூலகத்தையும் அவர்களிடம் கையளித்த பின் மூன்று நீதிபதிகளும் சட்டத்தரணிகளுடன் அங்கு நிற்பதையும் காணலாம்.