Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ராஜஸ்தான் ரோயல்ஸின் வெற்றி நடைதொடர்கிறது கங்குலியின் அணி 45 ஓட்டங்களால் தோல்வி
[03 - May - 2008] [Font Size - A - A - A]
ஐ.பி.எல்., தொடரில் ஷேன் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று முன் தினம் லீக் போட்டியில் யூசுப் பதான், அஸ்னாத்கர் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, கங்குலியின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது. போராடிய கங்குலியின் அரைச்சதம் வீணானது.

நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வோர்னை கப்டனாகக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது. `நாணயச் சுழற்சியில், வென்ற வோர்ன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

மேற்கிந்திய சுற்றுப் பயணத்தில் பங்கேற்பதால் அவுஸ்திரேலியாவின் பொண்டிங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்தின் மெக்கலமும் நாடு திரும்பினர். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இவர்களுக்கு பதிலாக சல்மான் பட், பிராட் ஹொட்ஜ் சேர்க்கப்பட்டனர்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களான ஸ்மித், அஸ்னாத்கர் வந்தனர். அதிரடியாக விளையாடிய அஸ்னாத்கர் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். மிகவும் மந்தமாக விளையாடிய ஸ்மித் (2), இஷாந்த் பந்தில் `கிளீன்' போல்டானார். அடுத்து வந்த கைப், டின்டா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இந்த ஜோடி அகார்கர் பந்தில் தலா ஒரு சிக்ஸர் அடித்து மிரட்டியது. தொடர்ந்து அதிரடிக்கு ஆசைப்பட்ட கைப் 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் களமிறங்கிய யூசுப் பதான், அஸ்னாத்கருடன் ஜோடி சேர்ந்தார். கங்குலி அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி ஓட்ட எண்ணிக்கையை விறுவிறுவென உயர்த்தியது. அகார்கர் வீசிய 9 ஆவது ஓவரில் அஸ்னாத்கர் `ஹட்ரிக்' பவுண்டரி உட்பட 15 ஓட்டங்கள் எடுத்தார். டேவிட் ஹசி வீசிய அடுத்த ஓவரில் யூசுப் பதான் வரிசையாக இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.

இதையடுத்து கப்டன் கங்குலி தானே பந்துவீச வந்தார். இவரது பந்துவீச்சையும் இந்த ஜோடி விட்டு வைக்கவில்லை. மூன்று பவுண்டரி உட்பட 14 ஓட்டங்கள் எடுத்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்னாத்கர் 29 ஆவது பந்தில் அரைச்சதம் அடித்தார். இவர் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகள் உட்பட 34 பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குல் பந்தில் வெளியேறினார். வாட்சன் முதல் பந்திலே `கோல்டன் டக்' ஆனார்.

அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தா பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். குல் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். யூசுப் பதானுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த இவர் 19 பந்தில் 33 ஓட்டங்கள் (ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்தார். மறுமுனையில் யூசுப் பதான் அரைச்சதம் அடித்தார். இவர் 2 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 33 பந்தில் 55 ஓட்டங்கள் எடுத்தார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்கள் எடுத்தது.

கடின இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. சல்மான் பட் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த அகார்கர், தன்வீர் மற்றும் வாட்சன் பந்தில் தலா ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார். இவர் 20 ஓட்டங்களுக்கு (2 சிக்ஸர் ஒரு பவுண்டரி) எடுத்த நிலையில் வாட்சன் பந்தில் அரங்கு திரும்பினார். இவரைத் தொடர்ந்து ஹொட்ஜும் (1) ஆட்டமிழக்க கொல்கத்தா திணறத் தொடங்கியது.

ஒரு முனையில் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் கங்குலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு டேவிட் ஹசி நன்கு ஒத்துழைத்தார். திரிவேதி வீசிய 8 ஆவது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். முனாப் பந்தை ஒரு கை பார்த்த கங்குலி ஒரு சிக்ஸர் , ஒரு பவுண்டரி உட்பட அந்த ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்தார். முதல் நான்கு போட்டியிலும் கோட்டைவிட்ட கங்குலி நேற்று முன்தினம் அரைச்சதம் அடித்தார்.

இந்நிலையில் சிக்ஸருக்கு ஆசைப்பட்ட இவர் வோர்ன் பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 2 சிக்ஸர் , 4 பவுண்டரி உட்பட 51 ஓட்டங்கள் எடுத்தார். சிறப்பாக ஆடிய டேவிட் ஹசி 42 ஓட்டங்கள் (2 சிக்ஸர், ஒரு பவுண்டரி) எடுத்து அரைச்சதம் அடிக்கும் வாய்ப்பை 8 ஓட்டங்களால் நழுவவிட்டார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் 151 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Email this page Your Opinion Print this page
ராஜஸ்தான் ரோயல்ஸின் வெற்றி நடைதொடர்கிறது கங்குலியின் அணி 45 ஓட்டங்களால் தோல்வி
கங்குலியின் நடவடிக்கை குறித்து ஷேன் வோர்ன் கடும் சீற்றம்
ஐ.பி.எல். போட்டிகளில் ஆட அக்தருக்கு அனுமதி வழங்கப்படாது
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் செல்ல முயற்சி
மார்ஷின் அதிரடி அரைச்சதம் கைகொடுக்க யுவராஜ் அணி ஏழு விக்கெட்டால் வெற்றி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com