லண்டன்: அல்-ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் உமர் ஒசாமாவுக்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது.
அவரது தந்தை பின்லேடனுடன் உமர் ஒசாமாவுக்கு இன்னும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 வயதாகும் உமர் பிரிட்டனில் வசிக்கும் 52 வயதான ஜென் பிளிக்ஸ் பிரவுனே என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினர் தற்போது எகிப்து நாட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் , பிரிட்டனின் ஷேஸ்ஷையர் நகரில் குடியேற விரும்பிய இவர்கள் எகிப்து நாட்டில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தூதரக அதிகாரிகள் உமருக்கு அவரது தந்தை பின்லேடனுடன் தொடர்பு இருப்பதாகவும் கடந்த ஆண்டு நடைபெற்ற லண்டன் குண்டு வெடிப்பில் இவருக்கும் பங்கு இருப்பதாகக் கூறி அவர் பிரிட்டனில் குடியேறுவதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே தனக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தூதரகத்தில் உமர் முறையீடு செய்துள்ளார்.