Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
புஷ்ஷின் செல்வாக்கு சரிவு
[04 - May - 2008] [Font Size - A - A - A]
நியூயோர்க்: அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் செல்வாக்கு சரிந்துள்ளது. அவர் சிறப்பாக செயற்படவில்லை என்று 71 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் செயல்பாடு குறித்து சி.என்.என். செய்தி நிறுவனம் அந்நாட்டு மக்களிடம் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் 29 சதவீதம் பேர் மட்டுமே புஷ்ஷுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 71 சதவீதம் பேர், புஷ்ஷுன் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் முன்னாள் ஜனாதிபதிகளான ஹரி ட்ரூமன், ரிச்சர்ட் நிக்ஸன் ஆகியோர் அவர்களது ஆட்சிக் காலத்தில் மக்கள் செல்வாக்கை இழந்த ஜனாதிபதிகளாக கருதப்பட்டனர்.

ஆனால், அவர்களை விட புஷ் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார் என்று சி.என்.என். அரசியல் விமர்சகர் பில் தெரிவித்தார்.

ஈராக் போர் குறித்து கேட்டபோது, 30 சதவீதம் பேர் மட்டுமே அந்தப் போர் நியாயமானது என்றனர். 70 சதவீதம் பேர் `தேவையற்ற போர்'என்றனர்.

பொருளாதார கொள்கையிலும் புஷ், கோட்டை விட்டுவிட்டதாக பெரும்பான்மை மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் எதிரொலிக்கக்கூடும் என்பதால் குடியரசுக் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் ஒபாமாவுக்கான மக்களின் ஆதரவில் வீழ்ச்சி
புஷ்ஷின் செல்வாக்கு சரிவு
யாருடைய மிரட்டலுக்கும் பயந்து அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்கிறார் ஷேக் ஹசீனா
நேபாளத்தில் புதிய அரசை விரைவில் அமைக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் அழைப்பு
பின்லேடனின் மகன் உமருக்கு பிரிட்டன் விசா மறுப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com