|
கண்டிப் பொலிஸார் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கண்டி நகரில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இரு முஸ்லிம் இளைஞர்கள் உட்பட 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்ய பட்டுள்ளனர்.
கண்டிப் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள அலி- முடுக்கு (மானைச்சந்தி) என்ற இடத்திலேயே இச்சுற்றிவளைப்பு தேடுதல்களைப் பொலிஸார் மேற் கொண்டனர். ஆள் உறுதிக்கான ஆவணங்கள் இன்மையாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொகவந்தாலாவை, அட்டன், நாவலப்பிட்டி ராகவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் கண்டிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். |