மட்டக்களப்பு மாவட்டத்தின் கொடுவாமடு கிராமத்தில் மற்றுமொரு தொகுதி மக்கள் நேற்று மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
கொடுவாமடு பிரதேசத்தின் மக்களில் ஒரு சாரார் இரு மாதங்களுக்கு முன் மீள்குடியமர்த்தப்பட்டனர். கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சற்று தாமதமாகின.
தற்போது அப்பிரதேசத்தில் கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டதன் பேரில் மீள் குடியேற்றம் செய்யப்படுவதாக செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 121 குடும்பங்களைச் சேர்ந்த 440 பேர் தமது சொந்தக் கிராமங்களில் குடியமர்த்தப்பட்டனர். மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் இவர்களுக்கு 02 வார காலத்திற்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.