*குடிசன மதிப்பீட்டில் தகவல்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சரை தீர்மானிக்கப் போவது தமிழர்களின் வாக்குகளே என்பது குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபர தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இக்குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபர தகவல்களின்படி கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 9,82,721 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 2006 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்திலிருந்து 409308 பேரும் மட்டக்களப்பிலிருந்து 330950 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மாவட்ட ரீதியான தமிழ் மக்களின் குடித்தொகைப் பரம்பல் பற்றிய கணிப்பீட்டில் அம்பாறை மாவட்டத்தில் 18.80 வீதத் தமிழர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 28 வீதத் தமிழர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 74.50 வீதத் தமிழர்களும் உள்ளனர்.
முஸ்லிம்களின் தொகை மொத்த சனத்தொகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 23.60 வீதமாகவும் அம்பாறை மாவட்டத்தில் 41.30 வீதமாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 48.60 வீதமாகவும் உள்ளது.
மொத்த சனத்தொகையில் சிங்களவர்களின் தொகை மட்டக்களப்பு மாவட்டத்தில் 01.90 வீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 23.40 வீதமும் அம்பாறை மாவட்டத்தில் 39.90 வீதமும் உள்ளமையும் அந்த மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.