Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிரியங்கா - நளினி சந்திப்பை திட்டமிட்டு மறைத்த சிறை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
[04 - May - 2008] [Font Size - A - A - A]
*மாநில தகவல் ஆணையத்திடம் மனுத்தாக்கல்

சென்னை: வேலூர் பெண்கள் மத்திய சிறைச்சாலையில் ராஜீவ்காந்தி கொலைக் கைதி நளினியை, பிரியங்கா சந்திக்கவில்லை என்று தகவல் தந்த சிறைச்சாலை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநில தகவல் ஆணையத்திடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரை சேர்ந்த ராஜ்குமார், சட்டத்தரணிகள் எஸ். துரைசாமி, வி. இளங்கோவன் மூலம், மாநில தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது;

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா 19.03.2008 அன்று ரகசியமாக வேலூர் அருகேயுள்ள ஷ்ரீபுரம் கோவிலுக்கு சென்று வந்ததாக 20 ஆம் திகதி பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. அவர் ஒரு பகுத்தறிவாதி. அப்படிப்பட்டவர் எப்படி கோவிலுக்குச் சென்றிருப்பார் என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. ஆகவே, வேறு காரணத்திற்காக அவர் வேலூர் வந்திருப்பார் என்று நினைத்தேன்.

இதுபற்றி நான் விசாரித்தேன். ஆனால், பத்திரிகைகளுக்கு தவறான மற்றும் திசை திருப்பும் வகையில் செய்தி கொடுத்திருப்பதையும், அவர் கோவிலுக்குச் சென்றுவரவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.

ராஜீவ்காந்தி கொலையில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியை வேலூர் மத்திய சிறைச்சாலையில் சென்று பிரியங்கா சந்தித்துள்ளார். ஆனால், இதை அரசு அதிகாரிகள் ரகசியமாக மறைத்துவிட்டு, அவர் கோயிலுக்கு சென்றதாக திசை திருப்பும் வகையில் செய்தியைத் தந்துள்ளனர்.

பிரியங்கா சந்தித்த விவரத்தை ரகசியமாக அரசு தரப்பில் வைத்திருந்ததால், உண்மை விபரம் அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வேலூர் பெண்கள் மத்திய சிறைச்சாலை அத்தியட்சருக்கு 08.04.2008 அன்று விண்ணப்பித்திருந்தேன்.

எந்தச் சட்டத்தின் கீழ் நளினியை, பிரியங்கா சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது? பிரியங்காவுடன் யார், யார் சிறைக்கு வந்தார்கள்? எவ்வளவு நேரம் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையில் சந்திப்பு நடந்தது? இருவரும் சந்திக்கும் நோக்கம் என்ன? போன்ற விபரங்களைக் கேட்டு விண்ணப்பித்தேன். இதற்காக 10 ஆயிரம் ரூபா வங்கி நகல் வரைபையும் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பி வைத்தேன். சிறை அத்தியட்சர் நான் அனுப்பிய விண்ணப்பத்தை 10 ஆம் திகதி பெற்றுக்கொண்டார். ஆனால், 14 ஆம் திகதி வரை எனக்கு எந்தத் தகவலும் சிறையிலிருந்து வரவில்லை.

கடந்த மாதம் 15 ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் பிரியங்காவும், நளினியும் வேலூர் சிறையில் சந்தித்ததாக செய்தி வெளியானது. இந்த சந்திப்பை பிரியங்காவும் உறுதி செய்து பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார். சிறைக்கு தான் சென்றேன் என்றும், கோவிலுக்குச் செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் தனிப்பட்ட முறையில் பிரியங்கா, நளினியை சந்தித்தார் என்று அறிக்கை வெளியிட்டார். சட்டபூர்வமான முறைப்படிதான் நளினியை சந்தித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை தமிழக அரசும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. சட்டசபையிலும் இது குறித்து கருத்துக் கூறப்பட்டது.

கடந்த மாதம் 8 ஆம் திகதி சிறை அத்தியட்சருக்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு பதில் வராததால், உள்துறை செயலாளருக்கும் நான் விண்ணப்பித்தேன். அவர், சிறை அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். உள்துறை செயலாளர், நான் கொடுத்த விண்ணப்பத்திற்கு 20 நாட்கள் ஆகியும் பதில் தரவில்லை.

இந்த சூழ்நிலையில், 11.04.2008 திகதியிட்ட பதில் கடிதம் ஒன்று சிறை அத்தியட்சரிடமிருந்து எனக்கு வந்தது. சிறை அத்தியட்சர் ராஜசவுந்தரி இந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். `வேலூர் பெண்கள் தனிச் சிறை ஆயுள் தண்டனை சிறைவாசி நளினி குறித்து சில விபரங்கள் கோரியது தொடர்பாக பதில்க் கடிதம் அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நளினியை 14.03.2008 மற்றும் 19.03.2008 ஆகிய திகதிகளில் எவரும் நேர்காணல் பார்க்கவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

சிறை அத்தியட்சர் உள்நோக்கத்துடன் தவறான தகவலை தெரிவித்துள்ளார். ஆனால், பிரியங்காவும், நளினியும் சிறையில் சந்தித்து பேசியுள்ளனர். பிரியங்கா வந்து சென்றதை சிறை ஆவணங்களில் பதிவு செய்யப்படவில்லை. இந்த செய்தி வெளிவராது என்று நினைத்தும், யாரும் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள் என்று நினைத்தும் சிறை ஆவணங்களில் பதிவு செய்யாமல் உள்ளனர்.

தவறான தகவலை தந்ததால் தகவல் உரிமைச் சட்டம் 18(2) பிரிவின் கீழ், மாநில தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையம், சிறை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Email this page Your Opinion Print this page
புதன் நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு கிழக்கின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
அரச, தனியார் ஊழியருக்கு 4 மணிநேரம் விடுமுறை
ஜிந்துப்பிட்டி பகுதியை சுற்றிவளைத்து பொலிஸார், இராணுவம் தீவிர தேடுதல்
சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே வடக்கு விசேட செயலணிக்குழு
ஊடகவியலாளருக்கு இலங்கையில் நியாயப்படுத்த முடியாத கட்டுப்பாடுகள்
மணலாறு, கெப்பிட்டிஹொலாவ பகுதிகளில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி
கிழக்கில் இதுவரை 50 தேர்தல் வன்முறைகள்
கிண்ணியாவில் தபாலக ஊழியர் சுட்டுக்கொலை
முகமாலையில் விடுதலைப் புலிகள் மிகவும் பலமான நிலையிலுள்ளனர்
கிளைமோர் தாக்குதலில் மின்கோபுரம் சேதம்
மன்னாரில் மோதல் படைவீரர் பலி; 4 பேர் காயம்
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
பிள்ளையான் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் ஆதாரங்களுடன் முறையீடு
வைத்தியசாலை மாடியிலிருந்து விழுந்து குழந்தை பலி; தாயாருக்கு விளக்க மறியல்
தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 இலங்கை மீனவரும் விடுவிக்கப்படுவர்
கம்பஹாவில் தேடுதல் 2 தமிழ் இளைஞர்கள் கைது
பூஜாபிட்டியவில் 4 பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை
12 நாட்களில் முழு நீளத் திரைப்படம் சுரேஷ்யோக்கிம் கின்னஸ் சாதனை முயற்சி
கிழக்கு தேர்தலின் பின் ஜே.வி.பி.அதிருப்திக்குழு புதிய கட்சியை பதிவு செய்ய தீர்மானம்
2 ஆளும் கட்சி எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பு
தனது துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
பிரியங்கா - நளினி சந்திப்பை திட்டமிட்டு மறைத்த சிறை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிழக்கில் ஜே.வி.பி.யும் தேர்தல் பணிகளில் தீவிரம்
கிழக்கில் தமிழர்களின் வாக்குகளே எவர் முதலமைச்சர் என்பதை தீர்மானிக்கும்
கொடுவாமடு கிராமத்தில் 121 குடும்பங்கள் மீளக்குடியமர்வு
இலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் தடையை மீறத் தமிழக மீனவர்கள் முடிவு?
தமிழ் மக்களை எனது கணவர் எதிரிகளாகப் பார்க்கவில்லை
கண்டியில் திடீர் சுற்றிவளைப்பு 7 தமிழ் இளைஞர்கள் கைது
குறைவருடப் பாராளுமன்றக் கலைப்பு
தெற்காசிய பிராந்தியத்தின் இறுதி நோயாளியாக இலங்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com