இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை குருநாகல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
குருநாகல் இப்பாஹமுவ கிராமத்தில் றணவீர குடியேற்றத்திட்டப்பகுதி இராணுவ காவலரண் ஒன்றில் கடமையாற்றிய இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது சடலம் குருநாகல் ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொக்கரல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.