ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த இருவர் இவ்வாரம் புதிய எம்.பி.க்களாக பதவியேற்கவுள்ளனர்.
மேல் மாகாண கூட்டுறவு அமைச்சர் துலிப் விஜேசேகர மற்றும் தேசிய லொத்தர் சபைத் தலைவர் சரண குணவர்தன ஆகிய இருவருமே புதிய எம்.பி.க்களாக பதவியேற்பர்.
ஆளும் கட்சி பிரதம கொரடாவாகவும், அமைச்சராகவும் பணியாற்றிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே சுதந்திர முன்னணி சார்பில் மேல்மாகாண கூட்டறவு அமைச்சராக பணியாற்றிய துலிப் விஜேசேகர எம்.பி.யாக நியமிக்கப்படவுள்ளார்.
இவ்வாறே கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அநுராபண்டாரநாயக்கா இயற்கை மரணமெய்தியதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தேசிய லொத்தர் சபையைச் சேர்ந்த சரண குணவர்தன எம்.பி.யாக நியமிக்கப்படவுள்ளார்.
இவர்களிருவரும் இவ்வாரம் பாராளுமன்றம் கூடும்சமயம் புதிய எம்.பி.க்களாக பதவியேற்பர். இதனைப் பாராளுமன்றத் தகவல்கள் உறுதிப்படுத்தின.
இவ்வருட முதல் 5 மாத காலப்பகுதியில் 4 புதிய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பதவியேற்ற நிலையில் இவ்வாரம் மேலும் இருவர் பதவியேற்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.