|
மன்னார் முன்னரங்க நிலைகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு படையினர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளில் காலையில் படையினரும் புலிகளும் கடும் மோதல்களில் ஈடுபட்டதாகவும் இதில் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |