திருகோணமலை கிண்ணியா பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை தபாலக ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடமை முடிந்து வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வீதியோரத்தில் கிடந்த இவரது சடலம் பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இவரை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.