கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டிய வன்முறைச் சம்பவங்கள் ஐம்பதாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
பொலிஸ் தேர்தல் செயலகத்தின் தகவல்படி அம்பாறையில் 24 வன்முறைச் சம்பவங்களும் மட்டக்களப்பில் 19 சம்பவங்களும் திருகோணமலையில் ஏழு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதேநேரம், உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்களின் தகவலின் படி மட்டக்களப்பு மாவட்டத்திலேயே வன்முறைகள் அதிகமெனத் தெரிவிக்கப்படுகிறது.