*3 படையினர் காயம்
மணலாறு மற்றும் கெப்பிட்டிஹொலாவ பகுதிகளில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் நேற்றும் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
மணலாறு ஹெலம்பவெவ பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஹெலம்பவெவ- நெலும்வெவ வீதியில் இடம்பெற்ற இந்தக் கிளைமோர் தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மணலாறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதேநேரம், கெப்பிட்டிஹொலாவ புளியங்குளம் பகுதியில் நேற்றுக் காலை 8 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா- கெப்பிட்டிஹொலாவ வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த படையினரே இந்தக் கிளைமோர் தாக்குதலுக்கிலக்காகினர்
விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவரும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவருமே படுகாயமடைந்தவர்களாவர்.
இவர்களிருவரும் பின்னர் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.