Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே வடக்கு விசேட செயலணிக்குழு
[04 - May - 2008] [Font Size - A - A - A]
*தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பு

யுத்த நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவும், தமிழர் பிரச்சினையை மூடி மறைப்பதற்காகவுமே வடக்குக்கென விசேட செயலணிக்குழுவை நியமித்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தையும்

அதனோடிணைந்த சக்திகளையும் கிழக்கு தேர்தலில் தோற்கடிக்க முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தமிழரசுக் கட்சியின் செயலாளரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா கூறுகையில்;

"வடக்கு விசேட செயலணிக் குழு அரசாங்கத்தின் மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த உதவியாக நிறுவப்பட்டுள்ளது. இக்குழுவின் செயற்பாட்டினால் தமிழர்களுக்கு பயன்கள் எதுவும் கிட்டப்போவதில்லை.

யுத்த நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசாங்கமும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும், தமிழர் பிரச்சினையை மூடி மறைக்கவுமே இச்செயலணிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒருபோதுமே தமிழர் அபிலாஷைகளை பிரதிபலிக்கப்போவதில்லை.

வடக்கு விசேட செயலணிக் குழுவின் மூலம் இங்கு இனப்பிரச்சினையே இல்லையென்ற மோசமான தோற்றப்பாட்டை உருவாக்கவும் சதி நடந்தேறுகிறது. இதனைக் கண்டு ஏமாறுவதற்கு தமிழ்ச் சமூகம் தயாரில்லை.

இதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது ஒட்டுமொத்த சமூகத்தின் விருப்பங்களுக்கு எதிராகவே நடந்தேறுகிறது. எனவே தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலை புறக்கணிக்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தை பிரித்துள்ளதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயன்ற அரசாங்கம் தற்போது அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் தமிழர் தாயக கோட்பாட்டை சிதைவடையச் செய்கிறது.

தேர்தல் மூலமாக சமூகங்களை மோதவிட்டு, தமிழர் தாயகத்தில் தமிழர் பலத்தைக் குறைக்கும் நாசகார நடவடிக்கையே முனைப்புப் பெற்றுள்ளது" என்றார்.

இதேவேளை, தமிழர் தேர்தலை பகிஷ்கரித்தால் அவர்களின் வாக்குகள் சூறையாடப்படாதாவென மாவை சேனாதிராஜா எம்.பி.யிடம் தினக்குரல் கேட்டபோது;

மிக விரைவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண மக்களை அறிவுறுத்தி அறிக்கையொன்றை விடுக்கும்.

எனினும், கிழக்குத் தேர்தலில் அரசாங்கத்தையும், அதனோடிணைந்த சக்திகளையும் தோற்கடிக்கும் அணுகுமுறையே அவசியமென வலியுறுத்துவதாகவும், இவ்வலியுறுத்தலே கூட்டமைப்பின் அழைப்பாக அமையுமெனவும் பதிலளித்தார்.

Email this page Your Opinion Print this page
புதன் நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு கிழக்கின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
அரச, தனியார் ஊழியருக்கு 4 மணிநேரம் விடுமுறை
ஜிந்துப்பிட்டி பகுதியை சுற்றிவளைத்து பொலிஸார், இராணுவம் தீவிர தேடுதல்
சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே வடக்கு விசேட செயலணிக்குழு
ஊடகவியலாளருக்கு இலங்கையில் நியாயப்படுத்த முடியாத கட்டுப்பாடுகள்
மணலாறு, கெப்பிட்டிஹொலாவ பகுதிகளில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி
கிழக்கில் இதுவரை 50 தேர்தல் வன்முறைகள்
கிண்ணியாவில் தபாலக ஊழியர் சுட்டுக்கொலை
முகமாலையில் விடுதலைப் புலிகள் மிகவும் பலமான நிலையிலுள்ளனர்
கிளைமோர் தாக்குதலில் மின்கோபுரம் சேதம்
மன்னாரில் மோதல் படைவீரர் பலி; 4 பேர் காயம்
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
பிள்ளையான் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் ஆதாரங்களுடன் முறையீடு
வைத்தியசாலை மாடியிலிருந்து விழுந்து குழந்தை பலி; தாயாருக்கு விளக்க மறியல்
தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 இலங்கை மீனவரும் விடுவிக்கப்படுவர்
கம்பஹாவில் தேடுதல் 2 தமிழ் இளைஞர்கள் கைது
பூஜாபிட்டியவில் 4 பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை
12 நாட்களில் முழு நீளத் திரைப்படம் சுரேஷ்யோக்கிம் கின்னஸ் சாதனை முயற்சி
கிழக்கு தேர்தலின் பின் ஜே.வி.பி.அதிருப்திக்குழு புதிய கட்சியை பதிவு செய்ய தீர்மானம்
2 ஆளும் கட்சி எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பு
தனது துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
பிரியங்கா - நளினி சந்திப்பை திட்டமிட்டு மறைத்த சிறை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிழக்கில் ஜே.வி.பி.யும் தேர்தல் பணிகளில் தீவிரம்
கிழக்கில் தமிழர்களின் வாக்குகளே எவர் முதலமைச்சர் என்பதை தீர்மானிக்கும்
கொடுவாமடு கிராமத்தில் 121 குடும்பங்கள் மீளக்குடியமர்வு
இலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் தடையை மீறத் தமிழக மீனவர்கள் முடிவு?
தமிழ் மக்களை எனது கணவர் எதிரிகளாகப் பார்க்கவில்லை
கண்டியில் திடீர் சுற்றிவளைப்பு 7 தமிழ் இளைஞர்கள் கைது
குறைவருடப் பாராளுமன்றக் கலைப்பு
தெற்காசிய பிராந்தியத்தின் இறுதி நோயாளியாக இலங்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com