Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜிந்துப்பிட்டி பகுதியை சுற்றிவளைத்து பொலிஸார், இராணுவம் தீவிர தேடுதல்
[04 - May - 2008] [Font Size - A - A - A]
*300 தமிழர்கள் கைது; உறவினர்கள் அமைச்சர்களிடம் முறையீடு

கொழும்பு ஜிந்துப்பிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை காலை படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலில் 300 தமிழர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிந்துப்பிட்டி வீதி, கன்னாரத்தெரு, ஆண்டிவால் வீதி, செட்டியார் தெரு, கதிரேசன் வீதி உட்பட பல பகுதிகளிலும் நேற்றுக் காலை இந்தப் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடைபெற்றது.

ஜிந்துப்பிட்டியையும் அதனை அண்டிய பகுதிகளையும் நேற்றுக் காலை சுற்றிவளைத்த பெருமளவு படையினரும் பொலிஸாரும் வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் லொட்ஜ்களில் இந்தத் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது 300 இற்கும் மேற்பட்டோர் வீதிகளுக்கு கொண்டு வரப்பட்டு நீண்டநேர தீவிர விசாரணைகளின் பின் 84 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் மிகப்பெரும்பாலானோர் அடையாள அட்டைகள், பொலிஸ் பதிவுகள் உட்பட அனைத்து ஆவணங்களை வைத்திருந்த போதும் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக அமைச்சர் பெ. சந்திரசேகரன் விடுத்த அறிக்கையில், இவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சந்திரசேகரனிடம் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் அமைச்சர் சந்திரசேகரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

வர்த்தக நிலையங்களில் தொழில்புரிந்து இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்குமிடத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு பணிப்புரைகளை வழங்குமாறும் அமைச்சர் சந்திரசேகரன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து, 15 பேர் மாத்திரமே விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதி அமைச்சர் எம்.எஸ். செல்லச்சாமி கூறுகையில்;

கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடைகளில் இருந்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட 89 தமிழர்களில் 85 பேர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போஷகரும் பிரதி தபால் அமைச்சருமான எம்.எஸ். செல்லச்சாமி தெரிவித்தார்.

நேற்றுக் காலை செட்டியார் தெருவை முற்றுகையிட்ட இராணுவத்தினர் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, நகைக்கடைகளில் வேலை செய்வோரே பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபருடனும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடனும் உடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கி இவர்களை காரணமின்றி கைது செய்திருப்பதால் உடன் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். இது தொடர்பாக நகைக்கடைச் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் எனக்குத் தெரிவித்தனர்.

தமிழர்களை வகை தொகையின்றி கைது செய்யும் சம்பவங்கள் மீண்டும் தொடர்கிறதோ? என்று கருத வேண்டியுள்ளது. விசாரணைகளுக்குப் பின்னர் 85 பேர் விடுவிக்கப்பட்டனர். 4 பேர் தொடர்ந்தும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததாகவும் செல்லச்சாமி தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
புதன் நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு கிழக்கின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
அரச, தனியார் ஊழியருக்கு 4 மணிநேரம் விடுமுறை
ஜிந்துப்பிட்டி பகுதியை சுற்றிவளைத்து பொலிஸார், இராணுவம் தீவிர தேடுதல்
சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே வடக்கு விசேட செயலணிக்குழு
ஊடகவியலாளருக்கு இலங்கையில் நியாயப்படுத்த முடியாத கட்டுப்பாடுகள்
மணலாறு, கெப்பிட்டிஹொலாவ பகுதிகளில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி
கிழக்கில் இதுவரை 50 தேர்தல் வன்முறைகள்
கிண்ணியாவில் தபாலக ஊழியர் சுட்டுக்கொலை
முகமாலையில் விடுதலைப் புலிகள் மிகவும் பலமான நிலையிலுள்ளனர்
கிளைமோர் தாக்குதலில் மின்கோபுரம் சேதம்
மன்னாரில் மோதல் படைவீரர் பலி; 4 பேர் காயம்
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
பிள்ளையான் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் ஆதாரங்களுடன் முறையீடு
வைத்தியசாலை மாடியிலிருந்து விழுந்து குழந்தை பலி; தாயாருக்கு விளக்க மறியல்
தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 இலங்கை மீனவரும் விடுவிக்கப்படுவர்
கம்பஹாவில் தேடுதல் 2 தமிழ் இளைஞர்கள் கைது
பூஜாபிட்டியவில் 4 பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை
12 நாட்களில் முழு நீளத் திரைப்படம் சுரேஷ்யோக்கிம் கின்னஸ் சாதனை முயற்சி
கிழக்கு தேர்தலின் பின் ஜே.வி.பி.அதிருப்திக்குழு புதிய கட்சியை பதிவு செய்ய தீர்மானம்
2 ஆளும் கட்சி எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பு
தனது துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
பிரியங்கா - நளினி சந்திப்பை திட்டமிட்டு மறைத்த சிறை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிழக்கில் ஜே.வி.பி.யும் தேர்தல் பணிகளில் தீவிரம்
கிழக்கில் தமிழர்களின் வாக்குகளே எவர் முதலமைச்சர் என்பதை தீர்மானிக்கும்
கொடுவாமடு கிராமத்தில் 121 குடும்பங்கள் மீளக்குடியமர்வு
இலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் தடையை மீறத் தமிழக மீனவர்கள் முடிவு?
தமிழ் மக்களை எனது கணவர் எதிரிகளாகப் பார்க்கவில்லை
கண்டியில் திடீர் சுற்றிவளைப்பு 7 தமிழ் இளைஞர்கள் கைது
குறைவருடப் பாராளுமன்றக் கலைப்பு
தெற்காசிய பிராந்தியத்தின் இறுதி நோயாளியாக இலங்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com