Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
புதன் நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு கிழக்கின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
[04 - May - 2008] [Font Size - A - A - A]
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் புதன் கிழமை இரவு நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள் செயலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மாகாணத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் சூறாவளிப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையிலேயே சகல தேர்தல் பிரசாரங்களும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுகுறித்த அறிவுறுத்தல்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் மாலை 6 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென பொலிஸார் கடும் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், ஆளும் கட்சியினர் கட்டுப்பாடுகளை மீறுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முஸ்லிம் பிரதேசங்களில் சூடுபிடித்திருந்த தேர்தல் பிரசாரம் தற்போது தமிழ் பிரதேசங்களிலும் அதிகளவில் இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் உத்தரவுக்கமைய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோர் அங்கு தமது சூறாவளிப் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அமைச்சர்கள் சுயேச்சைக்குழுக்களை ஆசை வார்த்தைகாட்டி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட வைப்பதிலும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டில் போட்டியிட இடம் கிடைக்காத கட்சிகளிலுள்ள சிலரை ஆளும் கட்சியுடன் கூட்டிணைத்து அவர்கள் மூலம் இறுதிநேர தீவிர தேர்தல் பிரசாரத்திற்கும் ஆளும்கட்சி திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு முன்னதாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்குச் சென்று தீவிரப் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Email this page Your Opinion Print this page
புதன் நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு கிழக்கின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
அரச, தனியார் ஊழியருக்கு 4 மணிநேரம் விடுமுறை
ஜிந்துப்பிட்டி பகுதியை சுற்றிவளைத்து பொலிஸார், இராணுவம் தீவிர தேடுதல்
சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே வடக்கு விசேட செயலணிக்குழு
ஊடகவியலாளருக்கு இலங்கையில் நியாயப்படுத்த முடியாத கட்டுப்பாடுகள்
மணலாறு, கெப்பிட்டிஹொலாவ பகுதிகளில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி
கிழக்கில் இதுவரை 50 தேர்தல் வன்முறைகள்
கிண்ணியாவில் தபாலக ஊழியர் சுட்டுக்கொலை
முகமாலையில் விடுதலைப் புலிகள் மிகவும் பலமான நிலையிலுள்ளனர்
கிளைமோர் தாக்குதலில் மின்கோபுரம் சேதம்
மன்னாரில் மோதல் படைவீரர் பலி; 4 பேர் காயம்
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
பிள்ளையான் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் ஆதாரங்களுடன் முறையீடு
வைத்தியசாலை மாடியிலிருந்து விழுந்து குழந்தை பலி; தாயாருக்கு விளக்க மறியல்
தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 இலங்கை மீனவரும் விடுவிக்கப்படுவர்
கம்பஹாவில் தேடுதல் 2 தமிழ் இளைஞர்கள் கைது
பூஜாபிட்டியவில் 4 பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை
12 நாட்களில் முழு நீளத் திரைப்படம் சுரேஷ்யோக்கிம் கின்னஸ் சாதனை முயற்சி
கிழக்கு தேர்தலின் பின் ஜே.வி.பி.அதிருப்திக்குழு புதிய கட்சியை பதிவு செய்ய தீர்மானம்
2 ஆளும் கட்சி எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பு
தனது துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
பிரியங்கா - நளினி சந்திப்பை திட்டமிட்டு மறைத்த சிறை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிழக்கில் ஜே.வி.பி.யும் தேர்தல் பணிகளில் தீவிரம்
கிழக்கில் தமிழர்களின் வாக்குகளே எவர் முதலமைச்சர் என்பதை தீர்மானிக்கும்
கொடுவாமடு கிராமத்தில் 121 குடும்பங்கள் மீளக்குடியமர்வு
இலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் தடையை மீறத் தமிழக மீனவர்கள் முடிவு?
தமிழ் மக்களை எனது கணவர் எதிரிகளாகப் பார்க்கவில்லை
கண்டியில் திடீர் சுற்றிவளைப்பு 7 தமிழ் இளைஞர்கள் கைது
குறைவருடப் பாராளுமன்றக் கலைப்பு
தெற்காசிய பிராந்தியத்தின் இறுதி நோயாளியாக இலங்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com