நண்பரின் வீட்டுக்கு ஒரு குடும்பத்தினர் விருந்தாளிகளாக வரவிருந்தனர். எனவே அவர்களுக்கு நல்ல உணவு வழங்கி சிறப்பாக உபசரிக்க அவர் திட்டமிட்டார்.
நல்ல ரக அரிசியை வாங்குவதற்காக அவர் பல கடைகளில் படியேறியும் பலன் கிடைக்கவில்லை.
பின்னர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் தொலைதூரத்திலுள்ள ஒரு பிரபல பலசரக்கு கடைக்குச் சென்று நல்ல ரக அரிசியை கொள்வனவு செய்தாராம்.
விவசாய நாடாக எமது நாடு விளங்கியும் நல்ல அரிசிக்காக அலையவேண்டியிருக்கிறதே என்று நண்பர் ஆதங்கப்பட்டார்.
வெள்ளைச் சம்பாவுக்கு கறுப்புச் சந்தைக்குத்தான் செல்ல வேண்டுமோ!