நாட்டில் வேலைவாய்ப்பின்றி இருப்போரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 47 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பில், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிக அளவில் இருப்பதும் இந்த ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
நாட்டில் வேலை வாய்ப்பின்றி இருப்போர் தொடர்பாக கடந்த வருடம் மேற் கொள்ளப்பட்ட கணிப்பீட்டில், தொழில்கள் எதுவும் இல்லாதிருப்போரின் எண்ணிக்கை 6 வீதமாகக் காணப்பட்ட அதேவேளை, இதில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இருமடங்கு அதிகமாக இருப்பதும் இனங்காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாகாண மட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தென்மாகாணம் மிகக்கூடுதலான வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளை கொண்டிருந்தததையும் இனங்காணப்பட்டுள்ளது.
தென்மாகாணத்தில் 85 வீதமானோர் வேலைவாய்ப்பற்று இருப்பதாக தெரியவந்துள்ள அதேவேளை மாவட்டரீதியில் மாத்தளை மாவட்டத்தில் ஆக்க கூடுதலானோர். (92 வீதம்) வேலையற்றிருப்பதாகவும், அநுராதபுரம், மாத்தறை, நுவரெலியா, மொனராகலை ஆகிய இடங்களில், குறைந்தளவிலான வேலை வாய்ப்பற்றவர்களைக் கொண்டிருப்பதும் அந்த ஆய்வில் இனங்காணப்பட்டுள்ளது.