கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தகவல்கள் திரட்டுதல் மற்றும் பகிர்வு செய்தல் செயற்பாடுகளில் ஈடுபடவிருக்கும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் பல்வேறு வழிகளில் உதவுவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணசபை தேர்தலின் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புச் சேவைகள், பொதுமக்களுடனான சந்திப்புக்கள், அரசியல் வாதிகளுடனான நேர்காணல்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிமுக்கிய இடங்களுக்குச் சென்று தகவல் திரட்டக்கூடிய இடங்களைக் காண்பித்தல் உட்பட தங்குமிட வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தமது செய்தி நிறுவனங்களின் பொருட்டு திருப்தியான வேலைகளை வழங்குவதற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.பாறூக்குடன் 065-2240286, 077-6451561 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமக்கான சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.