Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐ.தே.க.வுக்கு வாக்களித்தால் வட,கிழக்கு இணைவதுடன் முஸ்லிம்கள் புலிகளால் அடக்கி ஆளப்படும் நிலைவரும்
[05 - May - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் பேரியல் அஷ்ரப் எச்சரிக்கை

ஐ.தே.கட்சிக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் பிரிக்கப்பட்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தை மாற்றி வட,கிழக்காக இணைத்து விடுதலைப்புலிகளுக்கு தாரை வர்துக் கொடுக்கின்ற வாக்குகளாக அமையும். இதனால் விடுதலைப்புலிகளின் கைகள் ஓங்கி கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களை அடக்கி ஆளுகின்ற சக்தியாகவும் அது மாறிவிடும். இந் நிலையில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதை தவிர வேறு தெரிவாக எதுவும் இருக்காது. வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு போன்றவற்றை உறுதிப்படுத்துகின்ற வாக்குகளாக அமையுமென வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சரும் நுஆத் தலைவியுமான பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.

மாளிகைக்காட்டில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்; போலி வீரவசனம்பேசி மக்களை படு பாதாளத்தில் தள்ளிவிட்டு அவர்களின் முதுகுகளில் சவாரி செய்கின்ற மு.கா.தலைமையில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை பெறவேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பதன் மூலமே அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய மாகாணசபைத் தேர்தல் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வரலாற்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இந்த கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுடைய மாகாணமென்பதும் இந்த மாகாணத்தில் வாழும் முதலமைச்சர் முஸ்லிமாக இருக்க வேண்டுமென்பதும் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் கண்ட கனவாகும். இவ்வாறு தெரிவு செய்யப்படும் முதலமைச்சர் கிழக்கில் வாழ்கின்ற மூவின மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அரவணைத்துச் செல்கின்ற முதலமைச்சராக இருக்க வேண்டுமென்பதையே நாங்கள் விரும்புகின்றோம்.

இதற்கு எதிர் மாறாக தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தன்னுடைய தலைமைப் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் மக்களை தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இம்முறையாவது சுயமாக சிந்தித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறுகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்துக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதன் ஊடாகத்தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துக்கு நல்ல பாடம் புகட்ட முடியும். அவ்வாறு பாடம் புகட்டும் பட்சத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து சரியான பாதையின் ஊடாக கட்சியையும் முஸ்லிம் மக்களையும் வழி நடத்த முடியுமென்றார்.

Email this page Your Opinion Print this page
மியன்மாரை சூறாவளி தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மணலாறு, மன்னார் மோதல்களில் 10 படையினர் பலி; 15 பேர் காயம்
கிழக்கு மாகாண பாடசாலைகள் 9 ஆம் திகதி மூடப்படும்
மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர வடமாகாண ஆளுநராக நியமனம்
அம்பாறையில் அதிகாலையில் கடும் தாக்குதல் ஐ.தே.க.வின் பிரதம அமைப்பாளர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக கொழும்பில் இன்று உயர் மட்டக்கூட்டம்
கிழக்குத் தேர்தலில் ஆயுத பாணிகளுடன் நிராயுதபாணியாக ஐ.தே.க. போட்டியிடுகிறது
மினுவாங்கொடை, இரத்மலானை சுற்றிவளைப்பில் 41 பேர் கைது
நடுக்கடலில் சிக்கித் தவித்த 5 இலங்கை மீனவர்கள் உயிர் பிழைக்க மொட்டை அடித்து நேர்த்தி செலுத்தினர்
வெற்றிலைக்கு வாக்களிக்காது விட்டால் வீட்டில் இருங்கள் யானைக்குமட்டும் ஒருபோதும் வாக்களித்துவிடாதீர்கள்
தபால் திணைக்களத்திற்கு 300 மில்லியன் ரூபா நஷ்டம் அரசுக்கு பெரும் சுமையான விவகாரம்
1,70,000 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாததால் சந்தேகம்
எஸ்.பி.யை தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. யாக்க ஐ.தே.க.வினர் முயற்சி
கடந்த இரு மாதங்களில் விடுதலைப் புலிகள் மூன்று கப்பல் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்
மணலாறில் வான் புலிகள் வீசிய ஐந்து குண்டுகளில் கட்டிடங்கள் சிலவும் ஆறு வாகனங்களும் சேதம்
மேல் மாகாண சபை அமைச்சர்கள் இருவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்பு
யாழ்ப்பாணம் தாதிமார் பயிற்சிக்கல்லூரிக்கு புதிய கல்வியாண்டில் 200 மாணவர்கள் அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
தென்மராட்சிப் பகுதியில் நான்கு இடங்களில் காலபோகச் செய்கைக்கு படைத்தரப்பு அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
வவுனியா ஆஸ்பத்திரியில் 40 லட்சம் ரூபாசெலவில் மனநோய் சிகிச்சைப் பிரிவு
யுத்தத்தின் பின்னடைவை மூடி மறைக்கவே தமிழரைக் கைதுசெய்து அரசு பழிவாங்குகிறது
மடுவை புனித பிரதேசமாக்க அரசு முயன்றால் ஹெலஉறுமய அதனை கடுமையாக எதிர்க்கும்
குளியாப்பிட்டி கொழும்பு பஸ்ஸிலிருந்து நான்கு கிலோ கஞ்சா பொலிஸாரால் மீட்பு
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு வேண்டுகோள்
அகதிகள் முகாமில் இலங்கையர் தற்கொலை
சந்திவெளி வாகன விபத்தில் இரு இராணுவத்தினர் பலி
பிரிட்டன் இளவரசர் றிச்சர்ட் இலங்கைக்கு 3 நாள் விஜயம்
மிகின் லங்காவின் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிக இடைநிறுத்தம்
புதுக்குடியிருப்பில் விமானத் தாக்குதல்
மாரவில வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து அரசு விரிக்கும் மாய வலையில் சிக்காதிருப்போம்
மதகுருமார் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
கிழக்குப் பக்கம் தலை வைத்தும் படுக்காத அமைச்சர்கள் இன்று மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வாக்கு கேட்கின்றனர்
தேர்தல் பிரசாரத்திற்கு அரச ஊடகங்களை ஐ.ம.சு.மு. துஷ்பிரயோகம் செய்வதாக கடும் குற்றச்சாட்டு
சம்மாந்துறையில் இன்று பிரசாரக் கூட்டம் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்கிறார்
தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் பல்வேறு தியாகங்களை செய்தனர்
மாகாண சபைத் தேர்தலில் அரச பிரதிநிதிகளை தெரிவு செய்தால் முரண்பாடற்ற நிர்வாகம் ஏற்படும்
உகண பிரதேச ஜே.வி.பி. ஆதரவாளர்கள் ஐ.தே.க.வில் இணைந்து கொண்டனர்
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் கிராமங்கள் கொங்கிறீட் வீதிகளை கண்டன
பாரிய வாக்கு மோசடியில் ஈடுபட அரசும் அதன் முஸ்லிம் முகவர்களும் திட்டம்
ஐ.தே.க.வுக்கு வாக்களித்தால் வட,கிழக்கு இணைவதுடன் முஸ்லிம்கள் புலிகளால் அடக்கி ஆளப்படும் நிலைவரும்
தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம்களை பலிக்கடாவாக்க ஹக்கீம் தயங்கார்
தமிழ் இனத்தின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு பிரபாகரன் பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்
வெளிநாட்டு ஊடகங்களுக்கு மட்டக்களப்பு ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் உதவி
இலங்கையில் வேலையற்றோரின் தொகை 4, 47,000 ஆக அதிகரிப்பு
கௌரவமான ஒரு சமூகமாக மலையக மக்கள் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும்
மலையகம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
ஏனைய இனங்களுக்கு சமனாக மலையக சமூகம் முன்னேற்றமடையாமைக்கு அவர்களது மக்கள் பிரதிநிதிகளே காரணம்
நவீன அணுகுமுறையினூடாக தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே பிரதான நோக்கம்
மலையக அரசியல் தலைமைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com