அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் சுயேச்சைக் குழுக்களும் ஆதரவாளர்களும் கட்சி மாறும் படலத்தை ஆரம்பித்துள்ளன .
அம்பாறை தேர்தல் தொகுதியில் உகண பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜே.வி.பி. ஆதரவாளர்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐ.தே. கட்சியின் சார்பில் போட்டியிடும் தயாகமகேயை ஆதரித்து ஜ.தே. கட்சியின் வெற்றிக்காக உழைக்க முன்வந்துள்ளனர். இவர்கள் கடந்த புதன்கிழமை தொழிலதிபரும் அம்பாறை தேர்தல் தொகுதியின் அமைப்பாளருமான தயாகமகேயை சந்தித்து இதற்கான உத்தரவாதத்தினையும் உறுதிமொழியையும் வழங்கியுள்ளனர்.
இதேவேளை, கல்முனை பிரதேசத்தில் சுயேச்சை வேட்பாளர்களாக அன்னாசிச் சின்னத்தில் போட்டியிடும் சிலர் ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக உழைக்க உத்தேசித்துள்ளனர். எதிர்வரும் ஒரு சில தினங்களுக்குள் தமது நிலைப்பாடு சம்பந்மாக ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தவுள்ளதாக இக்குழுவின் வேட்பாளரான பக்கீர் முஹம்மட் சமீம் தெரிவித்துள்ளார்.