கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறையில் இன்று திங்கட்கிழமை மாபெரும் பிரசாரக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
சம்மாந்துறை எச்.ஆர். அரிசி ஆலைக்கு அருகில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்துக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். நௌசாத் தலைமைதாங்குவார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார்.
அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத், திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்.
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்தவாரம் திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.