மாரவில வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
நேற்றிரவு ஏழு மணியளவில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் மினி பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களே இவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.
விபத்து இடம்பெற்றதனைத் தொடர்ந்து மினிபஸ்ஸிற்கு அப்பகுதி மக்கள் தீ மூட்டியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.