மிகின் லங்கா விமான நிறுவனத்தின் விமானசேவைகள் அனைத்தும் இம்மாத முற்பகுதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சேவையில் ஈடுபடுத்துவதற்கு விமானங்கள் இல்லாத காரணத்தினாலேயே மிகின் லங்காவின் விமான சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு போதிய பணவசதி இல்லாத நிலையுடனேயே இந்த நிறுவனம் இயங்கிவந்தது.
இவ்விடயம் தொடர்பாக ஷ்ரீலங்கா சிவில் விமானசேவையின் தலைமை அதிகாரி பராக்கிரம திஸ்ஸநாயக்க கூறுகையில்;
மிகின் லங்கா இறுதியாக பல்கேரியாவுக்கு

மிகின் லங்கா இறுதியாக பல்கேரியாவுக்கு சொந்தமான A 321 என்ற விமானத்தை குத்தகைக்கு அமர்த்தியிருந்தது.
ஆனால், அவ்விமானத்தை திரும்பவும் குத்தகைக்கு அமர்த்துவதற்குரிய பணத்தினை செலுத்த முடியாத நிலையில் மிகின் லங்கா இருப்பதால் அவ்விமானத்தின் உரிமையாளரான பல்கேரிய நிறுவனம் விமானத்தை திரும்பப் பெற்றுவிட்டதாக மிகின் லங்காவைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்கனவே மிகின் லங்காவில் பயணம் மேற்கொள்வதற்கு பதிவுசெய்த அல்லது பற்றுச்சீட்டை பெற்றிருந்தவர்கள் வேறுவிமான சேவைகளுக்கு தமது பதிவுகளை மாற்றிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் ஆரம்பித்த மிகின் லங்கா நிறுவனமானது திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி ஆகிய இந்திய நகரங்களுக்கும் டுபாய், மாலைதீவு, பாங்கொக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் விமானசேவைகளை வழங்கியிருந்தது.
ஆனால், இவ்விடயம் தொடர்பாக மிகின் லங்காவின் தொலைபேசி நிலைய அதிகாரிகள் பதிலளிக்கையில்;
மே மாதத்திற்குரிய அனைத்து விமானசேவைகளும் தொழில்நுட்பக் கோளாறினால் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவை சீர் செய்யப்பட்டு மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் விமானசேவைகள் வழமைக்கு திரும்புமெனவும் தெரிவித்துள்ளனர்.