பிரிட்டன் இளவரசர் றிச்சர்ட் இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இளவரசர் றிச்சர்ட் 1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இலங்கைக்கு சுதந்திரம் கையளிக்கப்பட்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.