மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகனவிபத்தொன்றில் இராணுவத்தினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இவர்கள் உயரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்.எம்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்கள் இருவரும் துவிச்சக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருந்த சமயம் குறுக்கே வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.