கொழும்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்ன குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதனை 24 மணித்தியாலங்களுக்குள் தனக்கு எழுத்துமூலம் அறிவிக்குமாறு அமைச்சர் சந்திரசேகரன் பொலிஸ் மா அதிபரைக் கோரியுள்ளார்.
புறக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான தமிழர்களில் ஒரு சிலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக பொலிஸ் மா அதிபரிடம் தனது கடுமையான அதிருப்தியையும் அமைச்சர் வெளியிட்டார்.
என்ன காரணத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தாம் தெரிந்து கொள்ள விரும்புவது அடிப்படை மனித உரிமை சம்பந்தப்பட்ட விடயமாகும் எனவும் அமைச்சர் சந்திரசேகரன் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நூற்றுக் கணக்கான இளைஞர்களின் கைது விடயமாக அமைச்சரிடம் புறக்கோட்டை நகைக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் புலேந்திரன் முறையிட்டிருந்தார்.
மேற்படி கைது சம்பந்தமான நீதி கிடைப்பதற்கு மக்கள் நீதி மன்றம் செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.