களுத்துறை மஜிஸ்ரேட்டின் வீட்டுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரையும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் தாக்க முயற்சித்த 7 நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு களுத்துறை மஜிஸ்ரேட் நீதிபதியான அநுர செனவிரட்ன தனது கடமைகளை முடித்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த சமயம் அவரது வாகனத்தை இன்னொரு வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த குழுவொன்று நீதிபதியின் வாகனத்தை இடை மறித்து கொழும்பிலுள்ள கசீனோ நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர்கள் மதுபோதையில் காணப்பட்டனர்.
நீதிபதியின் வாகனத்தை அவரது வீட்டினுள் கொண்டு செல்வதற்கு வசதியாக அவர்களது வாகனத்தை முன்னகர்த்துமாறு பொலிஸ் கான்ஸ்டபிளும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கோரிய போது குறித்த குழுவினர் அவர்களைத் தாக்க முற்பட்டனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட 7 நபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைகள் முடியும் வரை அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.