யாழ்ப்பாணம் தாதிகள் பயிற்சிக்கல்லூரிக்கு 2007/2008 கல்வியாண்டுக்கு இருநூறுமாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர். ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போட்டிப் பரீட்சைமூலம் அதிக மதிப்பெண் பெற்ற 854 மாணவர்களின், நேர்முகப் பரீட்சை மூலம் இருநூறு தெரிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில், ஐம்பதுக்கும் அதிகமானவர்களே யாழ்ப்பாணம் தாதிகள் பயிற்சிக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுவந்தனர். நாடு பூராவும் நிலவும் தாதிமார் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, சுகாதார அமைச்சு, இவ்வருடம் அதிக எண்ணிக்கையானவர்களை, தாதிகள் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதிக்கும் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திலும் 200 பேர் தாதிகள் பயிற்சிக்கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தனித்தனியானகடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் தாதிகள் பயிற்சிக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.
மாணவதாதிகளுக்கான விரிவுரைகள் 15 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இங்கு பயிற்சி பெற்று வெளியேறும் தாதிமார்கள் வட மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணியாற்ற அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதன் மூலம் வட மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரிகைகளில் நிலவும் தாதிமார் பற்றாக்குறைக்கு தீர்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.